மேலும் அறிய

தஞ்சாவூர்: ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கு: 4 பேருக்கு "குண்டாஸ்"

தஞ்சாவூரில் ரவுடி வெட்டி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் குண்டர் சட்டத்தின் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ரவுடி வெட்டி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் குண்டர் சட்டத்தின் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தஞ்சாவூர் கரந்தை மிளகுமாரி செட்டித் தெருவைச் சேர்ந்தவர் சந்திரமோகன் மகன் அறிவழகன் (35). மீன் வியாபாரி. காவல் துறையின் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ள இவர் மீது கொலை, அடிதடி, கஞ்சா உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் கரந்தை புற்று மாரியம்மன் கோயில் அருகே உள்ள வடவாற்றங்கரையில் இவர் தனது நண்பர்களுடன் இணைந்து கடந்த செப்.25ம் தேதி இரவு மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, இவரை அப்பகுதிக்கு வந்த சிலர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதனால் பலத்த காயமடைந்த அறிவழகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், அறிவழகனுக்கும், கரந்தை கீரைக்காரத் தெருவைச் சேர்ந்த அன்பழகன் மகன் திவாகருக்கும் (30) முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், தஞ்சாவூர் நீதிமன்றத்தில் அறிவழகனும், திவாகரும் தனித்தனி வழக்கு தொடர்பாக ஆஜராகினர். நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த பிறகு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

பின்னர், அறிவழகன் தனது நண்பர்கள் மகேந்திரன், சுரேஷ், ஆனந்த் ஆகியோருடன்  மது அருந்தியபோது, அங்கு திவாகர் மற்றும் சிலர் வந்து அறிவழகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து கிழக்கு ோலீசார் வழக்குப்பதிவு கரந்தை கீரைக்காரத் தெருவைச் சேர்ந்த அன்பழகன் மகன் திவாகர் (24), நீத்துக்காரத் தெருவைச் சேர்ந்த ஜெய்சங்கர் மகன் ஹரிஹரன் (24), கல்லுக்காரத் தெருவைச் சேர்ந்த மோகன் மகன் கோவிந்தராஜ் (26), ரெட்டிப்பாளையம் சாலை வகாப் நகரைச் சேர்ந்த சிவகணேசன் மகன் கந்தவேல் (24) உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் திவாகர், ஹரிஹரன், கோவிந்தராஜ், கந்தவேல் ஆகிய 4 பேரை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்குமாறு மாவட்ட கலெக்டர்  பா. பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார். இதையடுத்து, 4 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தலைப்பு செய்திகள்

மழைநீர் தேங்காமல் தடுக்க அதிரடி! தஞ்சையில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தீவிரம்!
மழைநீர் தேங்காமல் தடுக்க அதிரடி! தஞ்சையில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தீவிரம்!
விரும்பிய வரம் தரும் விரதங்கள்! செவ்வாய் தோஷம் முதல் செல்வ வளம் வரை… பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிபாட்டு முறைகள்!
விரும்பிய வரம் தரும் விரதங்கள்! செவ்வாய் தோஷம் முதல் செல்வ வளம் வரை… பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிபாட்டு முறைகள்!
திருவோணம் வட்டாரத்தில் மானியத்தில் எண்ணெய் பனை சாகுபடி: தோட்டக்கலை உதவி இயக்குநர் தகவல்
திருவோணம் வட்டாரத்தில் மானியத்தில் எண்ணெய் பனை சாகுபடி: தோட்டக்கலை உதவி இயக்குநர் தகவல்
டெல்டா மாவட்டங்களில் செயல்படும் தொழிற்சாலைகள் கவனத்திற்கு... உரிமம் புதுப்பிக்க அக்.31-ம் தேதி கடைசி நாள்
டெல்டா மாவட்டங்களில் செயல்படும் தொழிற்சாலைகள் கவனத்திற்கு... உரிமம் புதுப்பிக்க அக்.31-ம் தேதி கடைசி நாள்

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Embed widget