Adheenam Marriage: செய்யக்கூடாததை செய்தாரா ஆதீனம்? ஆதீனமே தந்த தடாலடி விளக்கம்.!
Kumbakonam Suriyanar Kovil Adheenam: கும்பகோணத்தின் சூரியனார் கோயில் ஆதீனம் திருமணம் செய்துகொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Adheenam Marriage Issue: மக்களிடம் எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, சூரியனார் கோயில் ஆதீனம், மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள், நிர்வாக பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஆதீனம் திருமணம்
தமிழ்நாட்டில் உள்ள சைவ மடங்களில் கும்பகோணத்தில் உள்ள சூரியனார் கோயில் ஆதீனமும் ஒன்று. இந்த மடத்தின் 28வது ஆதீனமாக மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள் பொறுப்பு வகித்து வருகிறார். இவர், சமீபத்தில், கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஹேமாஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். அந்த பெண் பக்தையாக வந்து, பின்னர் இருவரும் விரும்பி திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து திருமணம் குறித்து ஆதீனம் தெரிவிக்கையில், “ நான் திருமணம் செய்து கொண்டது உண்மைதான், வெளிப்படையாக திருமணம் செய்து கொண்டேன், மடத்தின் விதிகளுக்கு எதிராக நடந்து கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.
குற்றச்சாட்டு:
இந்த சம்பவம் குறித்து, சூரியனார் கோவில் மடத்தின் நிர்வாக பணிகளை மேற்கொள்ளும் சுவாமிநாத தேசிக சுவாமிகள் தெரிவிக்கையில், இக்கோயில் மடத்தின் மரபுப்படி, இல்லறத்தில் இருந்த விட்டு துறவறம் மேற்கொள்ளலாம். ஆனால், துறவறம் வந்த பின்னர் இல்லறம் திரும்ப கூடாது என்பது மரபு , ஆதீனம் இந்த மரபை மீறிவிட்டார் என்று குற்றம் சாட்டினார். மேலும், மடத்திற்குச் சொந்தமான சொத்துக்களை அபகரிக்கவே, இந்த திருமணம் நடைபெற்றதாகவும் குற்றம் சாட்டினார்.
நிர்வாகப் பொறுப்பிலிருந்து விலகல்:
இதையடுத்து, ஆதீனத்துக்கு எதிராக கும்பகோணத்தில் சிலர் எதிர்ப்புகள் தெரிவிக்க ஆரம்பித்தனர். ஆதீன பொறுப்பில் இருந்து, விலகுமாறு கூறி , கோஷம் எழும்ப ஆரம்பித்தது. இந்த தருணத்தில், அங்கு பரபரப்பான சூழல் கிளம்பியது. இதையடுத்து, மடத்தின் நிர்வாக பொறுப்பில் இருந்து விலகுவதாக கூறியுள்ளதாகவும், அறநிலையத்துறையிடம் , மடத்தின் சாவியை ஆதீனம் ஒப்படைத்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், மடத்தின் நிர்வாக பொறுப்பில் இருந்து விலகியது பேசுபொருளாகியது.
இதுகுறித்து சூரியனார் கோயில் மடத்தின் நிர்வாக பொறுப்பை கவனித்து வரும் சுவாமிநாத சுவாமிகள் தெரிவிக்கையில்” மக்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக , கோயில் சொத்துகளுக்கு சேதம் ஏற்படக் கூடாது என்பதற்காக , நிர்வாக பொறுப்பில் இருந்து விலகுவதாக ஆதினம் தெரிவித்தார். மேலும் , பொறுப்பை ,அறநிலையத்துறையிடமே ஒப்படைப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், நிர்வாக பொறுப்பிலிருந்து ஆதீனம் விலகியுள்ள நிலையில், அவரை மடத்தின் ஆதீன பொறுப்பிலிருந்து நீக்குவதற்கு பிற சைவ மடங்களின் ஆதீனங்கள் பேசி வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.
”சட்டரீதியாக எதிர்கொள்வேன்”
இந்த சம்பவம் குறித்து சூரியனார் கோவில் ஆதீனம் தெரிவித்ததாவது , “ மடத்தின் முன்பு, சிலர் தேவையற்ற பிரச்னையை ஏற்படுத்தினர். இதனால் , மேலும் பிரச்னை ஏற்படக் கூடாது என்பதற்காக, நிர்வாகப் பொறுப்பில் இருந்து விலகினேன். சூரியனார் கோயில் மடத்தின் சொத்துக்கள், அதிகளவில் திருவாவடுதுறை மடத்திடம் உள்ளது. அதை மீட்க சட்டரீதியாக எடுக்க முயற்சித்ததால், எனக்கு எதிராக , திருவாவடுதுறை ஆதீனம் செயல்படுகிறார்.
இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என ஆதீனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சூரியனார் கோயில் திருமணம் செய்தது, அதற்கு எதிராக பிற சைவ மடங்களின் ஆதினங்கள் ஒன்றிணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: சூர்யாவின் கங்குவா எப்படி இருக்கு?திரைவிமர்சனம் இதோ!