தஞ்சாவூரில் உலகத் தர ஜுவல்லரியாக உயர்ந்து 2வது கிளையை திறந்துள்ள ஜோய்ஆலுக்காஸ்
உலகின் மிகவும் பிரபலமான நகைக்கடை நிறுவனமான ஜோய் ஆலுக்காஸ், தொழில் வளர்ச்சியில் மிக வேகமாக முன்னேறி வரும் தஞ்சாவூரில் தனது இரண்டாவது பிரமாண்டமான ஷோரூமைத் திறந்துள்ளது.

தஞ்சாவூர்: தொழில் வளர்ச்சியில் வளமையான வலுவான இடத்தை பிடித்து முன்னேறி வரும் தஞ்சாவூரில் பிரபலமாக மக்கள் மனதில் இடம் பிடித்த ஜுவல்லர் ஜோய்ஆலுக்காஸ் தனது 2-வது ஷோரூம் திறப்பு விழாவை நடத்தியுள்ளது. இதில் தஞ்சையின் வளர்ச்சியின் வேகத்தில் ஜோய் ஆலுக்காஸ் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதை காட்டுகிறது.
உலகின் மிகவும் பிரபலமான நகைக்கடை நிறுவனமான ஜோய் ஆலுக்காஸ், தொழில் வளர்ச்சியில் மிக வேகமாக முன்னேறி வரும் தஞ்சாவூரில் தனது இரண்டாவது பிரமாண்டமான ஷோரூமைத் திறந்துள்ளது.. இந்த ஷோரூமை தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், ஜோயாலுக்காஸ் நிர்வாக இயக்குநர் தாமஸ் மேத்யூ, ஜோயாலுக்காஸ் நிர்வாக இயக்குநர் ஆண்டனி ஜோஸ் மற்றும் பிற பிரமுகர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்.

திறப்பு விழாவில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள், பிரபலங்கள் மற்றும் ஜோய்ஆலுக்காஸ் குழுமத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். திறப்பு விழாவை முன்னிட்டு, சலுகை காலத்தில் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தங்களின் ஒவ்வொரு பர்ச்சேஸ்க்கும் உறுதியான இலவச பரிசினையும் பெற்றுச்செல்கின்றனர்.
இந்த புதிய ஷோரூம், சர்வதேச தரத்திலான உட்கட்டமைப்பு, விரிவான வசதிகள் மற்றும் ஒப்பற்ற வாடிக்கையாளர் சேவையை வழங்கும் உறுதிப்பாட்டுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதனுடன் விருதுகள் வென்ற பல பிராண்டு நகைகளின் சேகரிப்புகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஜோய்ஆலுக்காஸ், தனது சிறப்பான பாரம்பரியத்தைத் தொடர்ந்து, தனித்துவமான மற்றும் பல்வேறு நகைகளின் கலெக்ஷன்களை வழங்குகிறது. பாரம்பரிய பாணியிலிருந்து நவீன பாணி வரை, மிகப்பெரிய கலெக்ஷன்கள் ஒவ்வொரு விஷேசத்திற்கும், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன.
இங்கு காட்சிப்படுத்தப்பட்ட பிராண்டுகளில் அனுக்ரஹா, டெம்பிள் ஜுவல்லரி, பிரைடு டையமண்ட்ஸ், எலெகன்ஸா போல்கி டையமண்ட்ஸ், யுவா எவரிடே ஜுவல்லரி, அபூர்வா ஆன்டிக் கலெக்ஷன்கள் மற்றும் ரத்னா விலையுயர்ந்த கற்களின் நகைகள் ஆகியவை உள்ளன. மேலும், 2025-ம் ஆண்டின் தங்கம் மற்றும் வைரத்தின் புதிய வடிவமைப்புகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நகை ஆர்வலர்களுக்கு மிகப்பெரிய ஈர்ப்பை ஏற்படுத்துவது உறுதி.
இதுகுறித்து ஜோய்ஆலுக்காஸ் குழுமத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர். ஜோய் ஆலுக்காஸ் கூறியதாவது: தஞ்சாவூரில் எங்கள் மற்றொரு புதிய ஷோரூமைத் தொடங்கியதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த விரிவாக்கம், எங்கள் உலகத் தர நகைகளையும், சிறப்பான சேவைகளையும் எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு இன்னும் அருகில் கொண்டு செல்ல பேருதவி புரிகிறது. ஒவ்வொரு புதிய ஷோரூமும் உலகையே அலங்கரிக்கும் எங்கள் கனவின் ஒரு படியாக உள்ளது.
எங்கள் மீது நம்பிக்கையுள்ள வாடிக்கையாளர்களின் உறுதியான ஆதரவினால் இது சாத்தியமாகியுள்ளது. இந்த புதிய அனுபவத்தை பெற்றிட அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்; ஜோய்ஆலுக்காஸில் சர்வதேச ஷாப்பிங்கின் மகிழ்ச்சியை அனுபவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.”
ஜோய்ஆலுக்காஸ் வாருங்கள், உயர்தர சேவையும் ஒப்பற்ற தரமும் கொண்ட சிறந்த நகைத் தேர்வுகளை வாங்கி மகிழுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். பல்வேறு வகையிலும் வளர்ச்சி பெற்று வரும் தஞ்சாவூரில் தற்போது தனது 2வது கிளையை திறந்துள்ளது ஜோய் ஆலுக்காஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.





















