மேலும் அறிய

எனக்கு சிறப்பான அடித்தளம்: ஆரம்பகால பள்ளியை பெருமைப்படுத்திய இந்திய கடற்படை தளபதி

ஆரம்பக் கல்வி தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அடிப்படையாக அமைகிறது. அதே போல எனக்கும் இந்த பள்ளியில் சிறப்பான அடித்தளம் கிடைத்தது

தஞ்சாவூர்: ஆரம்பக் கல்வி தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அடிப்படையாக அமைகிறது. அதே போல எனக்கும் இந்த பள்ளியில் சிறப்பான அடித்தளம் கிடைத்தது என்று தஞ்சையில் தான் படித்த பள்ளிக்கு வந்த இந்திய கடற்படைத் தளபதி ஹரிகுமார் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இந்திய கடற்படை தளபதி ஹரிகுமார்

இந்திய கடற்படை தளபதி ஹரிகுமார். கேரளாவில் பிறந்தவர். இவரது தந்தை தஞ்சாவூரில் மத்திய அரசின் உர தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றியதால், தஞ்சாவூரில் உள்ள தூய இருதய நர்சரி பள்ளியில் கடந்த 1966 முதல் 1972ம் ஆண்டு வரை எல்கேஜி  முதல் 5 ஆம் வகுப்பு படித்துள்ளார்.

இந்நிலையில் இன்று தஞ்சாவூருக்கு வந்த ஹரிகுமார் தான் படித்த பள்ளிக்கு வருகை தந்தார். அவரை பேண்டு வாத்தியங்கள் முழங்க பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியர்கள், மாணவர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி வளர்ச்சிக்காக ரூ.5 லட்சம் காசோலையை ஹரிகுமார் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:


எனக்கு சிறப்பான அடித்தளம்: ஆரம்பகால பள்ளியை பெருமைப்படுத்திய இந்திய கடற்படை தளபதி

பழைய நினைவுகளை எண்ணி பார்க்கும் போது மகிழ்ச்சி

இங்கு படித்த பழைய நினைவுகளை எண்ணிப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இப்போதுள்ள சீருடைக்கும், அப்போது நாங்கள் அணிந்த சீருடைக்கும் அதிக மாற்றங்கள் இருக்கிறது. இந்த பள்ளியில் படித்ததால் தான் சிறந்த அடித்தளத்தை பெற முடிந்தது. ஆரம்பக் கல்வி தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அடிப்படையாக அமைகிறது. அதே போல எனக்கும் இந்த பள்ளியில் சிறப்பான அடித்தளம் கிடைத்தது.

இப்பள்ளியில் ஆங்கில மொழி அறிவு எனக்கு அதிகம் கிடைத்தது. அதே போல் கடினமான ஆங்கிலச் சொற்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என இங்கிருந்த ஆசிரியர்கள் பயிற்றுவித்தனர். எப்போதும் அவர்களை மறக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மரக்கன்றுகள் நட்டார்

பின்னர் பள்ளியில் மரக்கன்று நட்டும், தான் பயின்ற வகுப்பறைக்கு சென்று இருக்கையில் அமர்ந்தும், தன்னுடன் படித்த வகுப்புத் தோழர்களை பார்த்து அவர்களிடம் நலம் விசாரித்தும், பள்ளியில் படிக்கும்போது எடுக்கப்பட்ட குழு புகைப்படங்கள், நாடகங்களில் நடித்த புகைப்படங்களை பார்த்து வியந்து, தன் மனைவி கலாவிடம் எடுத்துக் கூறினார்.

முன்னதாக பள்ளிக்கு வந்த ஹரிகுமார் பள்ளியின் தலைமையாசிரியை ரோஸ் டாப்னி வரவேற்றார். இறுதியாக மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது, இதை பார்த்து மாணவர்களை ஹரிகுமார் பாராட்டினார்.

தலைப்பு செய்திகள்

சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget