மேலும் அறிய

ரேஷன் கடை அரிசி தரம் குறித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகரிக்கும் போராட்டங்கள்

சீர்காழி ரேஷன் கடையில் வாங்கிய அரிசியில் புழு, பூச்சிகள் நிறைந்திருந்ததால் பயனாளி அரிசியை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.

தமிழகம் முழுவதும் குடும்ப அட்டை தாரர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரேஷன் கடைகளில் அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவ்வாறு வழங்கப்படும் அரிசிகள் மிகவும் தரமற்றதாக இருப்பதாக தொடர்ந்து புகார்கள் ஏழுந்து வருவது வாடிக்கையாக உள்ளது. மனிதர்கள் சமைத்து சாப்பிடமுடியாத வகையில், புழு, பூச்சிகள் மிகுந்து காணப்படுவதாக  ஏழை எளிய மக்கள் பலரும் பல ஆண்டுகளாக வேதனை தெரிவித்து வருகின்றனர். மேலும், இதனை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டும், அரிசியை சாலையில்  கொட்டியும், தரமான அரிசி வழங்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இருந்த போதும் இது குறித்து அரசு பெரிதளவில் செவிசாகாமல், தொடர்ந்து தர மற்ற அரிசியை ரேஷன் கடைகளில் விநியோகம் செய்து வருகிறது என்ற குற்றச்சாட்டுகளையும் பொதுமக்கள் தெரிவிக்கின்றன.


ரேஷன் கடை அரிசி தரம் குறித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகரிக்கும் போராட்டங்கள்

செறிவூட்டப்பட்ட அரிசி

தரமற்ற அரிசி ரேஷன் கடைகளில் வழங்குவது ஒருபுறம் இருக்க, தற்போது மக்களுக்கு ஊட்டச்சத்து அளிக்க வேண்டும் என கூறி செறிவூட்டப்பட்ட அரிசி மறுபுறம் மக்களுக்கு எந்த ஒரு அறிவிப்பும் இன்றி அரசு வினியோகம் செய்து வருகின்றது. இதனால் செறிவூட்டப்பட்ட அரிசி தங்களுக்கு வேண்டாம் என பலரும் போர்க்கொடி தூக்கி பல இடங்களில் அரிசியை வட்டாட்சியர் அலுவலகத்தில் திரும்ப ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


ரேஷன் கடை அரிசி தரம் குறித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகரிக்கும் போராட்டங்கள்

அரிசியை சாலையில் கொட்டிய பொதுமக்கள்

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் உள்ள ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுவதாக பொதுமக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து குற்றச்சாட்டை தெரிவித்து வருகின்றனர். இதனை சிறிதும் பொருட்படுத்தாத அதிகாரிகள் இதுகுறித்து எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் தொடர்ந்து தரமற்ற அரிசியை விநியோகம் செய்து வருகின்றன.  இந்த சூழலில் சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் பயனாளி ஒருவர் அரிசி வாங்கியுள்ளார். 


ரேஷன் கடை அரிசி தரம் குறித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகரிக்கும் போராட்டங்கள்

அப்போது வாங்கிய அரிசி கண்ட அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அரிசி முழுவதும் ஏராளமான புழுக்களும், பூச்சிகளும் வெள்ளை, கருப்பு என பல நிறங்களில் நெளிந்து ஓடியுள்ளது. அந்த அரிசி நீண்ட நாட்கள் இருப்பு வைக்கப்பட்டு பின்னர் பயனாளிகளுக்கு வழங்கியதும், அதில் புழுக்கள் நிறைந்து இருந்ததும் தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்த பயனாளி தான் வாங்கிய புழுக்கள் நிறைந்த அரிசியை சாலையில் கொட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டதுடன் தரமற்ற அரிசி வழங்குவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ரேஷன் கடை ஊழியரின் விளக்கம் 

மேலும், இதுகுறித்து ரேஷன் கடை ஊழியரிடம் கேட்டபோது, அரிசி இவ்வாறு தரமற்று இருப்பதாக எழுதி உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளதாகவும், இந்த அரிசியை எடுத்துக்கொண்டு மாற்று அரிசி வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும், அதுவரை இருக்கும் அரிசியை பயனாளிகளின் விருப்பத்தின் பேரில் வழங்கி வருவதாக கூறியுள்ளார். ஆனால் பொதுமக்கள் கூறுகையில், கடந்த பல மாதங்களாக அரிசி தரம் குறித்து கேட்கும் போதெல்லாம் நல்ல அரிசி வந்தவுடன் தருகிறேன் எனக்கூறி பல மாதங்களாக அரிசி தராமல் ஏமாற்றி வருகின்றனர் என தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்Doctors Issue : ’’போதிய மருத்துவர்கள் இல்ல..பெரிய தலைவலியா இருக்கு’’புலம்பும் அரசு மருத்துவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Thirumavalavan: ட்விஸ்ட்! அதிமுக-வுடன் விசிக கூட்டணியா? திருமாவளவன் பேச்சால் அரசியலில் பரபரப்பு
Thirumavalavan: ட்விஸ்ட்! அதிமுக-வுடன் விசிக கூட்டணியா? திருமாவளவன் பேச்சால் அரசியலில் பரபரப்பு
"நீதி வெல்லட்டும்" கோஷமிட்ட நடிகை கஸ்தூரி.. நீதிமன்றத்தில் பரபரப்பு!
JEE Main 2025: இன்னும் சில நாள்தான்; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிச்சுட்டீங்களா? எப்படி?
JEE Main 2025: இன்னும் சில நாள்தான்; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிச்சுட்டீங்களா? எப்படி?
Karthigai Month 2024: கார்த்திகை தீபம் எப்போது? எந்த நாளில் என்னென்ன விசேஷம்? ஓர் அலசல்
Karthigai Month 2024: கார்த்திகை தீபம் எப்போது? எந்த நாளில் என்னென்ன விசேஷம்? ஓர் அலசல்
Embed widget