மேலும் அறிய

குழந்தைகள் திருமணம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே முக்கிய நோக்கம்: மனித உரிமை அமைப்பு

கிராமப்புறங்களில் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தை திருமணம் ஒழிப்பு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் மனித உரிமை அமைப்பின் முக்கிய பணியாகும்

தஞ்சாவூர்: கிராமப்புறங்களில் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தை திருமணம் ஒழிப்பு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் மனித உரிமை அமைப்பின் முக்கிய பணியாகும் என்று அதன் தஞ்சை மாவட்ட தலைவர் சுபைதா பேகம் தெரிவித்தார்.

மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் மனித உரிமை செல் அமைப்பின் தஞ்சை மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா நடந்தது. இதனை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி வாழ்த்தி பேசினார். சிறப்பு விருந்தினர்களாக கடலூர் மாவட்ட சேர்மன் கண்ணன், தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

உறுப்பினர்கள் பங்கேற்பு

நிகழ்ச்சியில் அமைப்பின் துணைத் தலைவர் ஆசாத் தாஸ், மாவட்ட பொதுச்செயலாளர் வள்ளிக்கொடி, அமைப்புச் செயலாளர் கவிதா, பொருளாளர் சுபாஷினி மாவட்ட ஊடக செயலாளர் பிரித்தா பீனிஷ், சட்ட செயலாளர் ஹெலன் ரோஸ் மற்றும் திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை மதுரை, நாகப்பட்டினம் மாவட்ட தலைவர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு

பின்னர் மாவட்ட தலைவர் சுவேதா பேகம் கூறுகையில்,  மனித உரிமை அமைப்பின் பயன்கள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி விளக்கி கூறினார் மேலும் நகர், கிராமப்புறங்களில் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை, சீண்டல் மற்றும் குழந்தை திருமணம் ஒழிப்பு பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாத நிலை உள்ளது. இதனை ஹியூமன் ரைட்ஸ் செல் அமைப்பின் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி கொடுப்பது முக்கிய பணி ஆகும்.

சட்டரீதியான உதவிகளையும் செய்வோம்

மேலும் சட்ட ரீதியான உதவிகளையும் இந்த அமைப்பு செய்யும். பொது மக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள எப்பொழுதும் தயாராக இருக்கிறோம். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு தற்போதைய காலக்கட்டத்தில் பாலியல் தொல்லைகள், சீண்டல்கள் ஆகியவை அதிகம் நடக்கிறது. அதேபோல் சிறுமிகளுக்கு குட் டச், பேட் டச் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களின் முக்கிய நோக்கம். 

இவை குறித்த விழிப்புணர்வு இருந்தாலே போதும் சிறுமிகளும், பெண்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள இயலும். முக்கியமாக கிராமப்புறங்களில் போதிய விழிப்புணர்வு இல்லாத நிலை இருந்து வருகிறது. அதை மாற்றி பெண்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும். மேலும் இதுமட்டுமின்றி தேவையான சட்ட உதவிகளையும் நாங்கள் எப்போதும் செய்து தர தயாராக இருக்கிறோம். எங்கள் உறுப்பினர்கள் எப்போதும் மக்களுக்கு சேவை செய்ய தயாராக உள்ளனர். முக்கியமாக கிராமப்புறத்தை சேர்ந்த பெண்கள் தங்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண எங்களை தொடர்பு கொள்ளலாம். அவர்களுக்கு தேவையான சட்டஉதவிகளை செய்து தருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்

தலைப்பு செய்திகள்

அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Embed widget