மேலும் அறிய

6 குடும்பங்களை ஒதுக்கி வைத்த விவகாரம்: மாவட்ட ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

மயிலாடுதுறை அருகே ஆறு குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கிய விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கீழமூவர்க்கரை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் நிலவன். இவர் அதே கிராமத்தில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். மேலும் இவருக்கு கர்ணன், ஜெயக்குமார், மாதவன், முரளி, ராஜா உள்ளிட்ட 5 சகோதரர்கள் உள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் அமைந்துள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு வெங்கலத்தாலான படிக்கட்டுகள் அமைத்து அதில்  தனது பெயர் பொறித்து  அன்பளிப்பு செய்துள்ளார். 


6 குடும்பங்களை ஒதுக்கி வைத்த விவகாரம்: மாவட்ட ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

இது தொடர்பாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் பெயர் பொறித்து படிக்கட்டு வைக்கக்கூடாது என அப்பகுதியில் உள்ள முக்கியஸ்தர்கள் கூட்டத்தில் கூறியுள்ளனர். இதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நிலவன் , கர்ணன், ஜெயகுமார் உள்ளிட்ட 6 சகோதரர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான 2 குடும்பங்களை  ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். மேலும் இந்த ஆறு குடும்பத்துடன் யாரும் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளக்கூடாது இதனை மீறினால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும், கீழமூவர்க்கரையில் உள்ள கடைகளில் அத்தியாவசிய பொருட்களை அவர்களுக்கு வழங்க கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். 


6 குடும்பங்களை ஒதுக்கி வைத்த விவகாரம்: மாவட்ட ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த கோயில் திருவிழாவில் ஒலிபெருக்கி மூலம் ஆறு குடும்பங்களின் பெயரைக் கூறி இவர்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும், இவர்கள் கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள கூடாது என தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த ஆறு குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் சீர்காழி தாலுகா அலுவலகத்திற்கு வருகை புரிந்து. தங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து கட்ட பஞ்சாயத்தில் ஈடுபட்ட ஊர் முக்கியஸ்தர்களான தேவேந்திரன், முத்து, காத்தலிங்கம், மணியன் மற்றும் இவர்களுக்கு தூண்டுதலாக செயல்பட்ட எண்ணரசு, சேகர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி சீர்காழி  வட்டாட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். அப்போது வட்டாட்சியர் அலுவலகத்தில் இல்லாததால் வட்டாட்சியர் அலுவலகத்தின் வாயிலில் அமர்ந்து தங்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை வேண்டும் என தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


6 குடும்பங்களை ஒதுக்கி வைத்த விவகாரம்: மாவட்ட ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

அதனையடுத்து துணை வட்டாட்சியர் அவர்களின் மனுவை பெற்று இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் கலைந்து சென்றவர்கள் மாவட்ட ஆட்சியர் லலிதாவை சந்தித்து முறையிட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில்  கோயில் திருவிழாவில் தங்களை அனுமதிக்க வேண்டும் என்றும், இதற்கு அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் தங்கள் குடும்பத்துடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்வோம் என வேதனையுடன் தெரிவித்து சென்றனர். 


6 குடும்பங்களை ஒதுக்கி வைத்த விவகாரம்: மாவட்ட ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

அதனைத் தொடர்ந்து சீர்காழி வட்டாட்சியர் சண்முகம், டிஎஸ்பி லாமெக் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது இதில் கிராம தலைவர்கள் கிராம மக்களை அழைத்து பேசி முடிவு தெரிவிப்பதாக தெரிவித்து சென்றனர். இந்நிலையில் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தார்கள் குடும்பத்தினர் வட்டாட்சியரிடம் புகார் அளித்த ஆத்திரத்தில் கீழமூவர்கரை சேர்ந்த எதிர் தரப்பு கோஷ்டியினர் ஒன்று சேர்ந்து ஊரை விட்டு ஒதுக்கி வைத்த குடும்பத்தினரை ஊருக்கு வந்தவுடன் சரமாரி தாக்கி மண்டையை உடைத்து விட்டு தப்பி ஓடியுள்ளார். படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுகுறித்து திருவெண்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


6 குடும்பங்களை ஒதுக்கி வைத்த விவகாரம்: மாவட்ட ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

இந்நிலையில் மீண்டும் நேற்று முன்தினம் சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இரு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் கீழமூவர்க்கரை மீனவ கிராமத்தை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அப்பொழுது ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட 6 குடும்பங்களையும் ஊருக்குள் சேர்க்க மாட்டோம் என கோட்டாட்சியர் அலுவலகம் வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் சமாதானம் செய்தனர். தொடர்ந்து கீழமூவர்க்கரை  கிராம நிர்வாகிகள் மற்றும் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட 6 குடும்ப உறுப்பினர்களிடம் கோட்டாட்சியர் நாராயணன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது சட்டரீதியான குற்றம் என்றும் என எச்சரித்த கோட்டாட்சியர் மளிகை பொருட்கள்,காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க தடை விதிக்க கூடாது எனவும், கிராமத்தில் சென்று சுமுகமாக சேர்ந்து வாழ வேண்டுமெனவும் அமைதிப் பேச்சுவார்த்தையில் இருதரப்பினர் இடையே எழுதி கையெழுத்து பெறப்பட்டது.


6 குடும்பங்களை ஒதுக்கி வைத்த விவகாரம்: மாவட்ட ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

இந்நிலையில் சட்டத்திற்குப் புறம்பாக ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த தடையை நீக்காமல் காய்கறி,தண்ணீர், மளிகை, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்கு மட்டுமே கிராம பஞ்சாயத்தார் அனுமதி அளித்துள்ளதாகவும், தாங்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்க கூடாது, கோயிலில் வழிபட அனுமதி கிடையாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர் எனவும், அரசு அதிகாரிகளும் சட்டத்திற்கு புறம்பான ஊரை விட்டு ஒதுக்கி வைத்த கட்டுப்பாட்டை நீக்க வழி செய்யாமல் ஒருதலை பட்சமாக அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக பாதிக்கப்பட்ட ஆறு குடும்பத்தினர் வேதனை தெரிவித்தனர். இந்நிலையில் பத்திரிகைகளில் இதுகுறித்து வெளியான செய்தியை அடுத்து மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து ஆறு குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது தொடர்பான அறிக்கையினை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

தஞ்சை வல்லம் பேரூராட்சி அசத்தல்: மாணவிகளுடன் இணைந்து வளம் மீட்பு பூங்காவில் மரக்கன்றுகள் நடும் பணி
தஞ்சை வல்லம் பேரூராட்சி அசத்தல்: மாணவிகளுடன் இணைந்து வளம் மீட்பு பூங்காவில் மரக்கன்றுகள் நடும் பணி
Ariyalur district power cut (16.10.26) :அரியலூர் மாவட்ட மக்கள் கவனத்திற்கு இன்று பவர் கட்... உங்கள் பகுதி இருக்கா பார்த்துக்கோங்க
Ariyalur district power cut (16.10.26) :அரியலூர் மாவட்ட மக்கள் கவனத்திற்கு இன்று பவர் கட்... உங்கள் பகுதி இருக்கா பார்த்துக்கோங்க
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
Gold and Jewelry Appraiser Training :தங்க நகை மதிப்பீட்டாளர் ஆகலாம்! சென்னையில் 5 நாள் பயிற்சி – 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
Gold and Jewelry Appraiser Training :தங்க நகை மதிப்பீட்டாளர் ஆகலாம்! சென்னையில் 5 நாள் பயிற்சி – 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Embed widget