கோரிக்கைகளை வலியுறுத்தி தோட்டக்கலை அலுவலர்கள் தஞ்சையில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம், தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர்: வேளாண்மைத்துறையில் செயல்படுத்திடும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-ஐ கைவிட வேண்டும். தோட்டக்கலை வளர்ச்சியை பாதிக்கக்கூடியதும், உழவர்களை பாதிக்க கூடியதுமான இந்த உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-ஐ அமல்படுத்த கூடாது என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூரில் தோட்டக்கலை அலுவலர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம், தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோட்டக்கலை உதவி இயக்குனரும் தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் தஞ்சாவூர் மாவட்ட தலைவருமான கே.வள்ளியம்மாள், உதவி தோட்டக்கலை அலுவலரும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் தஞ்சாவூர் மாவட்ட தலைவருமான எஸ்.குடியரசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசின் வேளாண்மைத்துறையில் செயல்படுத்திடும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-ஐ கைவிட வேண்டும். தோட்டக்கலை வளர்ச்சியை பாதிக்கக்கூடியதும், உழவர்களை பாதிக்க கூடியதுமான இந்த உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-ஐ அமல்படுத்த கூடாது. வேளாண் விஞ்ஞானிகளை கொண்டு குழு அமைத்து பரிந்துரையின் அடிப்படையில் செயல்படுத்தப்படாத இந்த திட்டத்தை எந்த காரணத்தை கொண்டும் அமல்படுத்த கூடாது.
தோட்டக்கலை துறை கள அலுவலர்களை அவசர காலத்தில் பணியிடப்பெயர்ச்சி செய்திடுவதை உடனே நிறுத்த வேண்டும். களப்பணியாளர்கள் இணைப்பினை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தோட்டக்கலை துறை வளர்ச்சியை உறுதி செய்திட வேண்டியும் கோஷங்கள் எழுப்பினர்.
இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தோட்டக்கலை உதவி இயக்குனர்கள், தோட்டக்கலை அலுவலர்கள், தோட்டக்கலை துணை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அடிப்படை வசதி செய்து கொடுங்க...
கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமிக்க கோரியும், இம்மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரியும் ஜனநாயக கூட்டமைப்பு சார்பில் கும்பகோணம் காந்தி பூங்கா முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை பொது மருத்துவமனையில் கடந்த மாதம் பிரசவத்தின் போது மூன்று குழந்தைகள் உயிரிழந்தது. இதற்கு போதிய மருத்துவர்கள் இல்லாதது காரணம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
பிரசவ சிகிச்சை பிரிவில் போதிய மருத்துவர்கள் நியமனம் செய்ய வலியுறுத்தியும், குறிப்பாக மயக்க மருந்து மருத்துவர்கள் 24 மணி நேரமும் மருத்துவமனையில் இருக்கும் வகையில் சுழற்சி முறையில் பணியமர்த்த வேண்டும். மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்து கும்பகோணம் காந்தி பூங்கா முன் ஜனநாயக கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.





















