மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து, பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஆட்சியர்!

தொடர் கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்ததை அடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே போன்று மயிலாடுதுறை மாவட்டத்திலும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு தொடங்கிய மழையானது தற்போது வரை தொடர்ந்து நீடித்து வருவதாலும், மேலும் இரு தினங்களுக்கு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஆரஞ்சு விடுக்கப்பட்டு கனமழை தொடரும் என்பதால், நாளையும் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து, பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஆட்சியர்!

மேலும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் நாளை 12 மற்றும் 13 ஆகிய இரண்டு நாட்களுக்கு வடகிழக்கு பருவ மழை மிக கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வுத்துறை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும், யாரும் நீர்நிலைகளுக்கு குளிக்க செல்லக் கூடாது.  மின் கம்பங்களை தொடக்கூடாது.  கொதிக்க வைத்த குடிநீர் அருந்த வேண்டும்.  என மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து, பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஆட்சியர்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பதிவான மழை அளவுகள் கடந்த அக்டோபர் 01 -ஆம் தேதி முதல் 31 -ஆம் தேதி வரை மயிலாடுதுறை மாவட்டத்தில் 172 மி.மீ மழையளவும், மணல்மேடு 65 மி.மீ மழையளவும், சீர்காழியில் 128.7 மி.மீ மழையளவும், கொள்ளிடத்தில் 98.6 மி.மீ மழையளவும், தரங்கம்பாடியில் 61.2 மி.மீ மழையளவும் பதிவாகியுள்ளது.  தொடர்ந்து அக்டோபர் 01 -ஆம் தேதி முதல் 11 -ஆம் தேதி இன்று வரை மயிலாடுதுறையில் 256 மி.மீ மழையளவும், மணல்மேட்டில் 226 மி.மீ மழையளவும், சீர்காழியில் 439 மி.மீ மழையளவும், கொள்ளிடத்தில் 453 மி.மீ மழையளவும், தரங்கம்பாடியில் 245 மி.மீ மழையளவும் பதிவாகியுள்ளதாகவும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். 

மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து, பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஆட்சியர்!

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று மட்டும் மயிலாடுதுறையில் 66.40 மி.மீ மழையளவும்,  மணல்மேட்டில் 66 மி.மீ மழையளவும், சீர்காழியில் 87.20 மி.மீ மழையளவும், கொள்ளிடத்தில் 62.60 மி.மீ மழையளவும், தரங்கம்பாடியில் 67 மி.மீ மழையளவும், செம்பனார்கோயிலில் 92.30 மி.மீ மழையளவும் பதிவாகியுள்ளது. தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாளும் மிக மற்றும்  கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.  அதனால் மிகவும் கவனத்துடன் பொதுமக்கள் இருக்க வேண்டும் எனவும்,  மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளாது எனவும்,  பொதுமக்கள் தங்கள் குறைகளை 04364-222588 – 9487544588 என்ற எண்ணிலும் 8148917588 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா வெளிட்டுள்ள  செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget