மேலும் அறிய

விவசாயத் தொழிலாளர்கள் ஹேப்பி அண்ணாச்சி... தொடர்ந்து கிடைக்கும் விவசாயப்பணிகள்

சம்பா, தாளடி பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால் விவசாயத் தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை பெய்தாலும் நாற்று நடுதல், உரம் தெளித்தல், களைப்பறிப்பு என்று தொடர்ந்து பணிகள் நடந்து வருகிறது

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்த கனமழை நன்கு வளர்ந்த சம்பா, தாளடி பயிர்களின் வளர்ச்சிக்கு உதவும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதனால் ஆலக்குடி, கல்விராயன்பேட்டை பகுதியில் விவசாயிகள் நாற்று நடும் பணி மற்றும் உரம் தெளிக்கும் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். தொடர்ந்து விவசாயப்பணிகள் கிடைத்து வருவதால் பெண் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தஞ்சை திருவாரூர் நாகை மயிலாடுதுறை கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. பல பகுதிகளில் கனமழை பெய்தது.

தஞ்சை மாவட்டம் ஆலக்குடி, சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, திருவையாறு, பாபநாசம் அம்மாபேட்டை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதில் ஆலக்குடி, வல்லம், சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, கள்ளப்பெரம்பூர், ராயந்தூர் உட்பட பல பகுதிகளில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பல பகுதிகளில் விவசாயிகள் நாற்று விட்டுள்ளனர். சில விவசாயிகள் பாய் நாற்றங்கால், நாற்று பறித்து நடுதல் உட்பட பல பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிலர் 40 நாட்கள் கடந்த நாற்றுகள் நன்கு வளர்ந்து வருவதால் உரம் தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து பெய்த மழை இந்த பயிர்களுக்கு நன்கு உதவும் என்று விவசாயிகள் தரப்பில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஒரு சில பகுதிகளில் தற்போதுதான் நாற்றுகள் நட்டுள்ளனர். இந்த இளம் நாற்றுகள் தொடர்ந்து மழை பெய்தால் வயலில் தண்ணீர் தேங்கி அழுகிவிடும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். 

சம்பா, தாளடி பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால் விவசாயத் தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை பெய்தாலும் நாற்று நடுதல், உரம் தெளித்தல், களைப்பறிப்பு என்று தொடர்ந்து பணிகள் நடந்து வருவதால் பெண் விவசாயத் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆலக்குடி உட்பட சில பகுதிகளில் முன்கூட்டியே நாற்று நட்ட விவசாயிகள் தற்போது வயல்களில் களை பறித்தல் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக விட்டு விட்டு பெய்யும் மழையால் சம்பா, தாளடி பயிர்கள் நன்கு வளர்ந்து வருகிறது. மேலும் மாவட்டம் முழுவதும் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதும் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறுவை சாகுபடி எவ்வாறு இலக்கை மிஞ்சி நடந்ததோ அதேபோல் தற்போது 3.40 லட்சம் ஏக்கரை விட சம்பா, தாளடி மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் தற்போது 2.75 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் நடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறம் மகிழ்ச்சி என்றால் மறுபுறம் அம்மாப்பேட்டை, பல்லவராயன்பேட்டை, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு உட்பட பல பகுதிகளில் இளம் நாற்றுகள் வாய்க்கால்கள் தூர்வாராததால் வெள்ளநீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி சோகத்தை உண்டாக்கி உள்ளது.

தலைப்பு செய்திகள்

சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
Embed widget