மேலும் அறிய
Advertisement
நாகையில் கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போகும் காவல்துறை - போலீசாருடன் பெண்கள் வாக்குவாதம்
கள்ள சாராய வியாபாரத்தை தடுக்க தவறிய காவல்துறையை கண்டித்து இறையான்குடி கிராமப் பெண்கள் வலிவலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்:காவல் நிலையத்துக்குள் நுழைந்து காவல்துறையிடம் கடும் வாக்குவாதம்.
நாகை மாவட்டம் இறையான்குடி கிராமத்தில் சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராம மக்களின் ஒற்றுமையாக செயல்பட்டு கள்ளச்சாராயத்தை ஒழித்து, கள்ளச்சாராயம் விற்பனை இல்லாத கிராமமாக திகழ்ந்து வந்தது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலிருந்து சட்டவிரோதமாக கள்ளசாராயம் கடத்தி வரப்பட்டு பாக்கெட் மூலமாக இறையான்குடி மற்றும் சிங்கமங்கலம் கிராமத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சாராய விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய கோரி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் பல முறை புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று வலிவலம் காவல் நிலையத்தில் புகாரளிக்க இளையான்குடி கிராமத்தைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டனர். அப்பொழுது வியாபாரிகளை உடனடியாக கைது செய்ய கோரி கண்டன கோஷங்களை எழுப்பியபடி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் யாரும் புகார் தெரிவித்தால் அவர்களைக் கொலை செய்துவிடுவோம் என மிரட்டல் விடுப்பதாகவும், மேலும் அவ்வழியே செல்லும் பள்ளி கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்படுவதால் அவர்களது நலன் கருதி உடனடியாக விற்பனையை தடுத்து நிறுத்தக் கோரி கிராம மக்கள் காவல்துறையினரிடம் முறையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வலிவலம் காவல் உதவி ஆய்வாளர் சரவணன் நீண்ட விடுப்புக்கு பிறகு பணிக்குச் சேர்ந்து இரண்டு நாட்களே ஆன நிலையில் சாராய விற்பனை தொடர்பான புகார் வந்துள்ளதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். புகார் அளிக்க வந்த கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு காவல் நிலையத்துக்குள் நுழைந்து காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அங்கு பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திரை விமர்சனம்
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion