மேலும் அறிய

அருமையான வேலைவாய்ப்பு அறிவிப்பு... முழு விபரமும் உங்களுக்காக!

ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் முக்கிய 6 பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பிரிவில் உள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தஞ்சாவூர்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை இருக்காம். என்னென்ன வேலைன்னா உதவியாளர், நூலகர் பணியிடங்கள்தான். சரி யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? வாங்க தெரிஞ்சுக்கலாம்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் முக்கிய 6 பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பிரிவில் உள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டில் மத்திய விளையாட்டுத்துறையின் கீழ் ஸ்ரீபெரும்புத்தூரில் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு கல்வி நிறுவனம் இயங்குகிறது. இங்கு ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பிரிவில் உள்ள 6 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. அந்த வகையில், 6 பதவிகளில் தலா 1 இடம் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்கள் உங்களுக்காக. 

தேர்வு கட்டுப்பாட்டாளர்     1    - 55 வயது வரை
நிதி அதிகாரி    1 - 57 வயதிற்கு கீழ்
நூலகர் உடன் படிவங்கள் அதிகாரி 1   - 30 வயது வரை
உதவியாளர்     1  -  27 வயது வரை
ஆலோசகர் (நிர்வாகம்) 1  -  62 வயதைக் கடந்திருக்கக்கூடாது
ஆலோசகர் (அகாடமிக்ஸ்)   1 -   62 வயதைக் கடந்திருக்கக்கூடாது

மொத்தம்  6   பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் ஆலோசகர் பதவிக்கான இடங்கள் மட்டும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு கட்டுப்பாட்டாளர் பதவிக்கு ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை பட்டப்படிப்புடன், 15 வருடங்கள் உதவி பேராசிரியராக பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது 15 ஆண்டுகள் நிர்வாக பணியில் அனுபவம் தேவை. கணினி திறன் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அதிகாரி பதவிக்கு கணக்கு பிரிவில் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் அவசியமாகும். நூலகர் பதவிக்கு நூலக அறிவியலில் முதுகலை பட்டப்படிப்பு அல்லது கலை, அறிவியல், வணிகம் ஆகிய ஏதேனும் ஒன்றில் முதுகலை பட்டப்படிப்பு இளங்கலை நூலக அறிவியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி உபயோகத்தில் அனுபவம் அவசியம்.
 
உதவியாளர் பதவிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினி பயன்பாடு திறன் அவசியம். ஆலோசகர் பதவிக்கு ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை பெற்றிருக்க வேண்டும். நிலை 10 ஊதியத்துடன் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். கணினி திறன் அவசியமாகும்.

தேர்வு கட்டுப்பாட்டாளர் பதவிக்கு தேர்வாகும் நபருக்கு ரூ.37,400 முதல் ரூ.67,000 வரை சம்பளம் வழங்கப்படும். நிதி அதிகாரி பதவிக்கு ரூ.15,600 முதல் ரூ.39,100 வரை சம்பளம் வழங்கப்படும். நூலகர் பதவிக்கு ரூ.9,300 முதல் ரூ.4,600 வரை சம்பளம் வழங்கப்படும். உதவியாளர் பதவிக்கு ரூ.5,200 முதல் 20,200 வரை சம்பளம் வழங்கப்படும்

ஆலோசகர் பதவிக்கு கடைசியாக பெற்ற ஊதியத்திற்கு நிகரான சம்பளம் வழங்கப்படும்.

நேரடி ஆட்சேர்ப்பு முறையில் நிரப்பப்படும் பணியிடங்களுக்கு எழுத்து/ திறன்/ நேர்காணல் தேர்வு நடைபெறும். பிரநிதித்துவம் அல்லது ஒப்பந்த முறையில் நிரப்பப்படும் பணியிடங்களுக்கு நேர்காணல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அழைப்பு அனுப்பப்படும்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் நேரடியாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அலுவலகத்திற்கு வந்தடையுமாறு அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பத்தை https://www.rgniyd.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன், பணிக்கு தேவையான ஆவணங்களின் நகல்களுடன் இணைத்து நேரிடையாகவோ அல்லது தபால் வழியாகவோ சமர்ப்பிக்கலாம். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: உதவிப் பதிவாளர் (நிர்வாகம்), ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் (RGNIYD), இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், இந்திய அரசு, பெங்களூரு - சென்னை நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதூர் - 602 105, காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு. (The Assistant Registrar (Administration), Rajiv Gandhi National Institute of Youth Development (RGNIYD), Ministry of Youth Affairs & Sports, Government of India, Bangalore to Chennai Highway, Sriperumbudur – 602 105,Kancheepuram District, Tamil Nadu.)

விண்ணப்பிக்க கடைசி நாள் 26.11.2025. தேர்வு/ நேர்காணல் பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பத்தில் என்ன பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை குறித்து, உரிய ஆவணங்கள் அனுப்பி வைக்க வேண்டும். கடைசி தேதிக்குள் விண்ணப்பம் நிறுவனத்தை சென்றடைய வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அடுத்தக்கட்ட தகவல் இமெயில் மூலம் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
ABP Southern Rising Summit 2025 LIVE:  ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
ABP Southern Rising Summit 2025 LIVE: ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Embed widget