சில வாரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மேலும் வலுப்பெறும்: ஜி.கே.வாசன் நம்பிக்கை
இடைநிலை ஆசிரியர்களின் தொடர் கோரிக்கை இன்னும் கேட்கப்படாமல் இருக்குது. சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க கல்வி துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

தஞ்சாவூர்: இன்னும் சில வாரங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி மேலும் வலுப்பெறும் என்று எம்.பி., ஜி.கே.வாசன் நம்பிக்கை தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் நடந்த தியாகராஜர் ஆராதனை தொடக்க விழாவில் கலந்துகொண்ட தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எம்.பி.,யுமான ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:
திருவையாறில் தியாகராஜரின்179-வது ஆராதனை விழா சீரும், சிறப்புடன் தொடங்கி உள்ளது. இந்த விழா இந்தயிா மட்டும் அல்ல, உலகம் முழு வரும்பரவி வருகிறது. இந்த விழா 5 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. 5-வது நாள் பஞ்சரத்ன கீர்த்தனைகள் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க.- த.மா.கா.- பா.ஜனதா உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இத்தனை ஆண்டுகளாக பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அதனை இன்றைக்கு அறிவித்து இருக்கிறார்கள். ஆனால் சட்டசபை கூடும் போது இதுதொடர்பாக முறையாக அரசாணையாக வெளியிட வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களின் தொடர் கோரிக்கை இன்னும் கேட்கப்படாமல் இருக்குது. சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க கல்வி துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ள விரும்புகிறேன் . தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இன்னும் சில வாரங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெறும் என்று நம்புகிறேன். காங்கிரஸ் கட்சியில் தலைவர்களுக்கு இடையில் உள்ள கருத்து வேறுபாறு இருப்பது குறித்த கேள்விக்கு, நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.





















