மேலும் அறிய

தஞ்சையில் அரசு பள்ளி சத்துணவு கூடத்தில் தீவிபத்து - உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு

சிலிண்டர் டியூப்பில் கசிவு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் சிலிண்டர் டியூபில் தீ பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த சமையலர் உடனடியாக தலைமை ஆசிரியரிடம் தகவல் தெரிவித்தார்.

தஞ்சை அருகே உள்ள மருங்குளத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ளது. இப்பள்ளியில் சுமார்  700 க்கும் மேற்ப்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். காலை வழக்கம் போல் பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து வகுப்பறையில் பாடங்களை கவனித்து கொண்டிருந்தனர். பள்ளியின் வளாகத்தில் சத்துணவு மாணவர்களுக்கு மதிய உணவு சமையல்கூடத்தில் தயாராகி கொண்டிருந்தது. இந்த பணியில் சமையலர், உதவியாளர் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.அப்போது திடீரென சிலிண்டர் டியூப்பில் கசிவு ஏற்பட்டது.  ஸ்டவில் இருந்து தீ, சிறிது நேரத்தில்  சிலிண்டர் டியூபில் தீ பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த சமையலர் உடனடியாக பள்ளி தலைமை ஆசிரியரிடம் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து தீ அணைப்பான் கருவி கொண்டு உடனடியாக தீ அணைக்கப்பட்டு மற்ற இடங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. பள்ளிக்குள் தீவிபத்து என்ற தகவல் பரவியதயடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள், பொது மக்கள் பள்ளிக்கு முன் திரண்டனர்.  இதில் அதிஷ்டவசமாக எந்த விதமான விபத்தின்றி மாணவர்கள்  உயிர் பிழைத்தனர்.இருப்பினும் தகவல் அறிந்து வந்த தஞ்சை தீயணைப்பு துறையினர் சிலிண்டரை அகற்றி வேறு சிலிண்டர் பொருத்தினர். இதனால் பெருமளவில் தீ விபத்து தடுக்கப்பட்டு உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.  இந்த சம்பவம் பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தஞ்சையில் அரசு பள்ளி சத்துணவு கூடத்தில் தீவிபத்து - உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு

இது குறித்து பொது மக்கள் கூறுகையில்,இப்பள்ளியில், ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் படித்து வருகின்றனர்.. இங்கு சுமார் 25 க்கும் மேற்பட்ட மாணவர்கள் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர். சமையலுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் கேஸின் டீயூப் போடப்பட்டு பல நாட்கள் ஆனதால், பல இடங்களில் விரிசல் விட்டிருந்தது. ஆபத்தான நிலையில் இருக்கும் சிலிண்டரின் டீயூப் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். ஆனாலும் எந்த பிரச்சனையும் வராது என பள்ளி நிர்வாகத்தினர் இருந்து விட்டனர். சமைக்கும் போது, உணவில் சேர்க்கப்படும் எண்ணை டீயூப்பில் ஒட்டியிருந்ததால், கேஸில் கசிவு ஏற்பட்டு, அதில் ஒட்டியிருந்த எண்ணையில் தீப்பிடித்துள்ளது. சிலிண்டர் வெடித்திருந்தால், அருகிலுள்ள பள்ளி வகுப்பறைகளில் படித்து கொண்டிருந்த மாணவர்களின் நிலை கேள்வி குறியாகியிருக்கும்.

தஞ்சையில் அரசு பள்ளி சத்துணவு கூடத்தில் தீவிபத்து - உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு

சமைக்கும் போது தீப்பிடித்ததால், உடனடியாக தீயணைக்கும் கருவியை கொண்டு அணைத்து விட்டனர். பள்ளி மாணவர்கள்  இருந்திருந்தால், பெரும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும்.கடந்த 2004 ஆம் ஆண்டு கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில், சத்துணவு கூடத்தில் ஏற்பட்ட தீவிபத்தினால், 94 பள்ளி குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். 18 குழந்தைகள் தீக்காயங்களுடன் உயிர் பிழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சத்துணவு கூடத்தில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்களின் தரம் குறித்தும், அடுப்பு, டீயூப் தரமானவைகளாக பயன்படுத்த வேண்டும், வாரந்தோறும் மட்டுமில்லாமல், சமைக்க தொடங்கும் போது, டீயூப்,சிலிண்டர்கள் சரியாக இயங்குகிறதா, கேஸ் மணம் வருகிறதா என ஆய்வு செய்திருந்தால், இது போன்ற விபரீதம் நடந்திருக்காது.எனவே, மாவட்ட நிர்வாகம், கேஸ் சிலிண்டர், அடுப்பு, டீயூப்புக்களை தினந்தோறும் பராமரித்து, கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என்றனர்.

தலைப்பு செய்திகள்

சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
Embed widget