மேலும் அறிய

தஞ்சாவூர் : இழப்பீடு கேட்டு அதிகாரிகளுக்கு, வெற்றிலை பாக்கு வைத்து அழைத்த விவசாயிகள்

’’விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வரும் விவசாயிகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை’’

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா மாரநேரி கிராமத்தில் அய்யனார் ஏரி உள்ளது. இந்த ஏரி தண்ணீரை நம்பி சுமார் 1400 ஏக்கர் விவசாயம் நடைபெறுகிறது. இந்த அய்யனார் ஏரி, ஆனந்த காவிரி வாய்க்கால் பாசன பகுதி மற்றும் கல்லணை கால்வாய் பாசன பகுதிகளாகும். இந்நிலையில்,ஏரியில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்தது. இதனால் ஏரி சுருங்கி குட்டை போலானாது. இதனால் அருகில் உள்ளவர்கள் விவசாய சாகுபடி செய்வதற்கு போதுமான தண்ணீர் கிடைக்காமல் போய் விட்டது. நீர் வழிப்பாதைகள், நீர் வெளியேறும் பாதைகள் அனைத்து ஆக்கிரமிக்கப்பட்டதால், ஆறுகளில் தண்ணீர் வந்தாலும், அய்யனார் ஏரி நிரம்பாத நிலையானது. இது குறித்து ஆக்கிரமிக்கப்பட்டவர்களிடம் கேட்கும், உரிய பதில் கூறாமலும், ஆக்கிரமிப்பை அகற்றாமல் அலட்சியப்படுத்தினர். பின்னர் மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை வைத்தும், ஏரியிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றாமலும், அதற்குண்டான நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

இதனால் குறுவை, சம்பா, தாளடிசாகுபடிக்கு தண்ணீர் இல்லாமல், வயல்கள் காயத்தொடங்கின. பின்னர் மின் மோட்டாரை கொண்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நிலை உருவானது. மேலும் ஏரி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், நிலத்தடி நீர் மட்டும் குறைந்ததால், அப்பகுதியுள்ள பெரும்பாலான ஆழ்குழாய் மோட்டாரில்  தண்ணீர் வராமல் போனது. இதனை கருத்தில் கொண்டு, விவசாயிகளின் நலனுக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக, மாரநேரியில் உள்ள 188 ஏக்கர் பரப்பளவில் உள்ள அய்யனார் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, விவசாயி கிருஷ்ணமூர்த்தி என்பவர் மதுரை ஐகோர்டில் தொடர்ந்த வழக்கில், சுமார் 114 ஏக்கர் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கை விசாரிந்த நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது தஞ்சாவூர் மேற்பார்வை பொறியாளர், அய்யனார் ஏரியில் ஆக்கிரமித்துள்ள 125 ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  வருவாய் துறை, காவல்துறை உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன் படி கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது ஏற்பட்ட பிரச்சனையால், விவசாயிகளை குண்டு கட்டாக துாக்கி அப்புறப்படுத்தி விட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இந்நிலையில், அதிகாரிகள் ஏரியில் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி சுமார் 50 ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்த நிலங்களை பொதுப்பணித் துறையும், வருவாய்த் துறையும்,  ஏரி எனக்கூறி விவசாயிகளின் வாழ்வை பாதிக்கும் நடவடிக்கையை தொடர்கின்றனர். எனவே,  71  குடும்பங்களின் நிலத்திற்கு விவசாயம் செய்ய ஆணை வழங்கவும், விவசாயிகள் இழந்த நிலத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும், விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வரும் விவசாயிகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை, பாதிக்கப்பட்டவர்கள் தொடங்கியுள்ளனர்.

தஞ்சாவூர் : இழப்பீடு கேட்டு அதிகாரிகளுக்கு, வெற்றிலை பாக்கு வைத்து அழைத்த விவசாயிகள்

ஒருங்கிணைப்பாளர்கள் டி.நடராஜன், கே.ரவிச்சந்திரன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தது. அப்போது, 65 வயதுள்ள முதியவர் மூக்கையன் உண்ணாவிரதப் பந்தலில் மயங்கி விழுந்தார். அவருக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். இதனையறிந்த, அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முகசுந்தரம், உண்ணாவிரதம் இருக்கும் விவசாயிகளை இது நாள் வரை எந்த அதிகாரிகளும் பார்வையிடாமல், கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றனர். அதிகாரிகளை அழைக்கும் விதமாக வெற்றிலை பாக்கு தட்டுடன் சீர் வைத்து அழைப்பது போல் நுாதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விவசாயப் பெண்களும்,  வெற்றிலைப் பாக்கு தட்டுடன், தங்களது கோரிக்கைகளை கேட்க வேண்டும் என நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
PM Modi: மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு  - திருமாவை சாடிய அன்புமணி
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு - திருமாவை சாடிய அன்புமணி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Lorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | MaduraiTVK Member Audio | RN Ravi Praised Tamilnadu | ”தமிழ்நாடு தான் BESTபெண்கள் பாதுகாப்பா இருக்காங்க” RN ரவி புகழாரம் | DMKCongress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
PM Modi: மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு  - திருமாவை சாடிய அன்புமணி
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு - திருமாவை சாடிய அன்புமணி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
Seeman Photo Troll: சீமானை போட்டு பொளக்கும் நெட்டிசன்கள்... தீராத புகைப்பட சர்ச்சை...
சீமானை போட்டு பொளக்கும் நெட்டிசன்கள்... தீராத புகைப்பட சர்ச்சை...
ஹேப்பி நியூஸ்! ‘புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது’ - டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
ஹேப்பி நியூஸ்! ‘புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது’ - டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
"நாட்டை சீர்குலைக்க சதி.. கவனமா இருங்க" பிரதமர் மோடி வார்னிங்!
ஸ்டாலின் பகிர்ந்த தமிழ்நாட்டின் சிறப்பு – புகழ்ந்து தள்ளிய ராகுல்காந்தி – என்ன விஷயம்?
ஸ்டாலின் பகிர்ந்த தமிழ்நாட்டின் சிறப்பு – புகழ்ந்து தள்ளிய ராகுல்காந்தி – என்ன விஷயம்?
Embed widget