மின் நுகர்வோர்களே உங்கள் கவனத்திற்கு...!
வரும் 5ம் தேதி (வியாழக்கிழமை) வல்லம் சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது

தஞ்சாவூர்: தஞ்சையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 5ம் தேதி நடைபெறுகிறது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தஞ்சை செயற்பொறியாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தஞ்சை மின் பகிர்மான 5 வட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் தலைமையில் ஒவ்வொரு மாதமும் முதல் 3 வியாழக்கிழமை அன்று நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். அதன்படி வரும் 5ம் தேதி (வியாழக்கிழமை) வல்லம் சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் தஞ்சை மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நடத்தப்பட உள்ளது.
வல்லம், மின்நகர், செங்கிப்பட்டி, வீரமரசன்பேட்டை, கள்ளப்பெரம்பூர், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி தஞ்சை புறநகர் பகுதி அலுவலகங்களை சார்ந்த மின்நுகர்வோருக்காக காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
எனவே ஏதேனும் குறைகள் இருப்பின் மின் நுகர்வோர் நேரில் வந்து இந்த கூட்டத்தில் தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

