தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிப்பு; மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டில் தமிழில் வங்கி வேலையை உறுதிப்படுத்த வேண்டும், வங்கி எழுத்தர் பணிகளுக்கு மாநில மொழியின் அவசியம் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும்
வங்கிப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பாக திராவிட கழகத்தின் இளைஞர் அணி சார்பில் வங்கிப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிக்கும் மத்திய அரசை கண்டித்து திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுத்துறை வங்கிப் பணிகளில் எழுத்தராக சேர்ப்பவர்களுக்கு சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற விதி தற்பொழுது பாஜக ஆட்சியில் மாற்றப்பட்டு விட்டது. மேலும் மாநில மொழிகளில் தேர்வு கட்டாயம் இல்லை எனவும் அது வெறும் முன்னுரிமை மட்டுமே என்று கூறுவதால் பாதிக்கப்படுபவர்கள் தமிழக இளைஞர்கள் மேலும் அரியானா ராஜஸ்தான ஒடிசா போன்ற மாநிலங்களை சேர்ந்த வட மாநில இளைஞர்கள் தமிழ்நாட்டு வங்கிப் பணிகளில் அதிக அளவில் பணியமற்றப்படுவதாகவும் 2022-23 ஆம் ஆண்டுகளுக்கான வங்கி கிளர்க் பணிகளில் பேங்க் ஆப் இந்தியா கனரா வங்கி இந்தியன் வங்கி பஞ்சாப் வங்கி யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகியவற்றில் நியமனம் செய்யப்பட்ட 843 பணிகளில் 400 பேர் வெளிமாநிலத்தவர்கள் ஆவர்.
மேலும் ரயில்வே துறையில் தமிழ்நாட்டில் இந்தி தெரிந்தவர்கள் அதிக அளவில் வேலைக்கு சேர்ந்து வருவதாகவும் பயண சீட்டு வாங்கும் இடத்தில் பணியாற்றுவோர் மற்றும் டிக்கெட் பரிசோதகர்களுக்கு தமிழ் தெரியவில்லை என குற்றம் சாட்டி வங்கி பணிகளில் தமிழ் இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தமிழ்நாட்டின் வங்கி சேவைக்கு தமிழ் மொழி தேவை இல்லையா, அரசுடைமை வங்கிகளில் தமிழ்நாட்டில் பணியாற்ற வடநாட்டவர்களுக்கு முன்னுரிமையா, இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை ரத்து செய்ய வேண்டும், மறைமுகமாக இந்தி மொழியை திணிக்கக் கூடாது, ஓங்கட்டும் ஓங்கட்டும் ஒடுக்கப்பட்டோர் போராட்டம், தமிழ்நாட்டில் தமிழில் வங்கி வேலையை உறுதிப்படுத்த வேண்டும், வங்கி எழுத்தர் பணிகளுக்கு மாநில மொழியின் அவசியம் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும், என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிட கழக நகரத் தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் பொன்முடி தலைமைக் கழக பேச்சாளர் ராம அண்ணாதுரை மாவட்டத் தலைவர் மோகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்