மேலும் அறிய

தஞ்சாவூர் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி

ஒரத்தநாடு சட்டப்பேரவை தொகுதியில் திமுக வேட்பாளர் ஆர்.வைத்திலிங்கம் வெற்றி வெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இரு இடங்களில் தவெக வெற்றி பெற்றுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 5 இடங்களில் திமுகவும், பாபநாசத்தில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. தஞ்சாவூர், கும்பகோணம்  தொகுதியில் தவெக வெற்றி பெற்றுள்ளது.

தஞ்சாவூர் சட்டப்பேரவை தொகுதியில் தவெக வேட்பாளர் ஆர்.விஜய்சரவணன் வெற்றி வெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் இரண்டாமிடம் பெற்றுள்ளார். அதே போல் பாஜக வேட்பாளர் எம்.முருகானந்தம் உள்பட போட்டியிட்ட 11 பேரும் டெபாசிட் தொகையை இழந்தனர். தஞ்சாவூர் தொகுதியில் திமுக, பாஜக, தவெக, நாதக உட்பட 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இங்கு மொத்தம் உள்ள 2,52,676 வாக்குகளில், 1,99,040 வாக்குகள்(தபால் வாக்குகள் உட்பட) பதிவானது. நேற்று காலை வாக்கு எண்ணிக்கையில் தொடங்கியது முதலே தவெக வேட்பாளர் ஆர்.விஜய்சரவணன் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தார். 

24 சுற்றுகள் முடிவில் தவெக வேட்பாளர் ஆர்.விஜயசரவணன் 87,705 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரை சண்.ராமநாதனை விட 16,955 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் 70,750 வாக்குகளும், பாஜக வேட்பாளர் கருப்பு எம்.முருகானந்தம் 26,790 வாக்குகளும், நாதக வேட்பாளர் கிருஷ்ணகுமார் 9,383 வாக்குகளும் பெற்றனர். இதில்,  திமுக  வேட்பாளரை தவிர மற்ற வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர்.

ஒரத்தநாடு சட்டப்பேரவை தொகுதியில் திமுக வேட்பாளர் ஆர்.வைத்திலிங்கம் வெற்றி வெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் இரண்டாமிடம் பெற்றுள்ளார். அதே போல் நாதக வேட்பாளர் திருமுருகன் மற்றும் சுயேட்சை வேட்பாளர் அனைவரும் டெபாசிட் தொகையை இழந்தனர்.

ஒரத்தநாடு தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாதக உட்பட 9 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இங்கு மொத்தம் உள்ள 2,33,542 வாக்குகளில், 1,95,475 வாக்குகள்(தபால் வாக்குகள் உட்பட) பதிவானது. நேற்று காலை வாக்கு எண்ணிக்கையில் தொடங்கியது முதலே திமுக வேட்பாளர் ஆர்.வைத்திலிங்கம் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தார். 

24 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் ஆர்.வைத்திலிங்கம்  86,759 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் அரவிந்தை விட 35,028 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.  தவெக வேட்பாளர் அரவிந்த் 51,731 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் மா.சேகர் 44,260 வாக்குகளும், நாதக வேட்பாளர் திருமுருகன் 10,135 வாக்குகளும் பெற்றனர். 

திருவையாறு சட்டப்பேரவை தொகுதியில் திமுக வேட்பாளர் துரை.சந்திரசேகரன் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் இரண்டாமிடம் பெற்றுள்ளார். திருவையாறு தொகுதியில் திமுக, அமமுக, தவெக, நாதக உள்பட13 பேர் போட்டியிட்டனர். இங்கு மொத்தம் உள்ள 2,58,374 வாக்குகளில்,2,22,215 வாக்குகள் (தபால் வாக்குகள் உட்பட ) பதிவானது. நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே திமுக வேட்பாளர் துரை.சந்திரசேகரன் தொடர்ந்து முன்னிலை வகித்தார். 25 சுற்றுகள் முடிவில் துரை.சந்திரசேகரன் 80,425 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் மணிகண்டனை விட 8,555 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதில் தவெக வேட்பாளர் மணிகண்டன் 71,870 வாக்குகளும், அமமுக வேட்பாளர் வேலு.கார்திகேயன் 55,121 வாக்குகளும், நாதக வேட்பாளர் செந்தில்நாதன் 10,681 வாக்குகளும் பெற்றனர்.

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget