மேலும் அறிய

தஞ்சை மாவட்டத்தில் பட்டாசு வெடித்தபோது 13 பேர் சிறிய அளவில் காயம்

ஒரு சிறுவன் மட்டும் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் திருவிடைமருதூர், தஞ்சாவூர், மதுக்கூர் அருகே அத்திவெட்டி ஆகிய 3 இடங்களில் தீ விபத்துக்கள் ஏற்பட்டன.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் தீபாவளி பட்டாசு விபத்துக்களில் 2 ஆண்கள் மற்றும் 11 சிறுவர்கள் சிறிய அளவில் காயமடைந்து சிகிச்சை பெற்றனர். இதில் ஒரு சிறுவன் மட்டும் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் திருவிடைமருதூர், தஞ்சாவூர், மதுக்கூர் அருகே அத்திவெட்டி ஆகிய 3 இடங்களில் தீ விபத்துக்கள் ஏற்பட்டன.

தீபாவளியின் போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக கொண்டாடுவார்கள். சில நேரங்களில் பட்டாசுகள் வெடிக்கும் போது தீக்காயம் அடைந்து விடுகின்றனர். பட்டாசுகள் வெடிக்கும்போது பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் என்று தீயணைப்புத்துறையினர் பல்வேறு வகையிலும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் தீபாவளி நேரங்களில் பட்டாசு விபத்துக்கள் நடப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. 

இந்தாண்டு நேற்று தீபாவளி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் நகர் பகுதிகள் மற்றும் கிராமப்பகுதிகளில் மக்கள் உற்சாகமாக பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். இந்நிலையில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதில் 8 சிறிய அளவிலான விபத்துக்கள் ஏற்பட்டு உடனடியாக தடுக்கப்பட்டது. இதேபோல் மாவட்டத்தில் பட்டாசுகள் வெடிக்கும் போது 2 ஆண்கள் மற்றும் 11 சிறுவர்கள் என மொத்தம் 13 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்றனர். இதில் ஒரு சிறுவன் மட்டும் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

தஞ்சை மாவட்டத்தில் தீபாவளியன்று மின்கசிவு காரணமாக தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் ஒரு மளிகை கடை எரிந்து சாம்பலானது. இதில் ரூ.5 லட்சம் மதிப்பு பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. இதேபோல்  திருவிடைமருதூரில் சிறிய கூரை வீடு, மதுக்கூர் அருகே அத்திவெட்டியில் ஷெட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டிராக்டர் மற்றும் டிரெய்லர், ஒரு கார் ஆகியவை எரிந்து சேதமடைந்தன. இவை பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட விபத்துக்கள் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் கூறுகையில், மிகச்சிறிய அளவில் பட்டாசுகள் வெடித்து காயமடைந்த சம்பவங்கள் நடந்துள்ளது. இருப்பினும் விபத்தில்லா தீபாவளியை அனைவரும் கொண்டாட வேண்டும் என்பதுதான் முக்கியம். பட்டாசுகள் வெடிக்கும் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும் என்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தோம். பெரியவர்கள் துணையுடன் சிறியவர்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். திறந்த வெளியில் பட்டாசுகள் வெடிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். குடியிருப்பு பகுதியில் ராக்கெட் போன்ற பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று பல்வேறு விதத்திலும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தோம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இன்னும் விழிப்புணர்வு தேவை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget