CUET - நுழைவுத்தேர்வை ரத்து செயக்கோரி திருவாரூரில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
’’பொது நுழைவுத் தேர்வு என்பது நவீன மனுதர்மம் என்றும் இதன் மூலம் ஏழை எளிய பின்தங்கிய மாணவர்கள் மத்திய பல்கலைக்கழகங்களில் கல்வி பெற முடியாது’’
மத்திய பல்கலை கழகங்களில் இளங்கலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு எழுதுவது கட்டாயம் என்கிற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது முதல் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாணவர் அமைப்புகள் இதனை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக இந்த பொது நுழைவுத் தேர்வின் மூலம் ஏழை எளிய மாணவர்கள் கிராமப்புற மாணவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மாணவர்களும் பாதிக்கும் சூழ்நிலை இருப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். மத்திய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத் தேர்வை அமல்படுத்துவது மற்றும் புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது என மத்திய அரசு தொடர்ந்து மாணவர் விரோத போக்கை கடைபிடித்து வருவதாக மாணவர் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. மேலும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு எதிர்க்கட்சிகளும் இந்த மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வுக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
மதிமுக இளைஞர் அணி மற்றும் மாணவரணி சார்பில் நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலைப் பட்டப்படிப்பிற்கு கொண்டுவரப்பட்டுள்ள பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகில் மதிமுக திருவாரூர் மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப் படிப்பில் சேருவதற்காக மாணவர்களுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.இதனை எதிர்த்து தமிழக எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியான மதிமுக இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய பல்கலைக்கழகங்களில் பொது நுழைத் தேர்வு கொண்டு வருவதை எதிர்த்தும், மத்திய அரசைக் கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை தஞ்சாவூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த மதிமுகவினர் இதில் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பொது நுழைவுத் தேர்வு என்பது நவீன மனுதர்மம் என்றும் இதன் மூலம் ஏழை எளிய பின்தங்கிய மாணவர்கள் மத்திய பல்கலைக்கழகங்களில் கல்வி பெற முடியாது எனவும் தெரிவித்ததுடன், புதிய கல்விக் கொள்கைக்கான தங்கள் எதிர்ப்பையும் பதிவு செய்தனர். இந்த போராட்டத்தில் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்ட நிலையில் திருவாரூர் மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மதிமுக மாநில துணை பொதுச்செயலாளர் முருகன்மாநில இளைஞரணி செயலாளர் ஆசைத்தம்பி மாநில மாணவரணி செயலாளர் சசிகுமார் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.