மேலும் அறிய

மயிலாடுதுறை: புதிதாக 26 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று!

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று புதிதாக 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து தொற்றின் எண்ணிக்கை 21,250 ஆக உயர்ந்துள்ளது.

நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் தொற்று  பரவ தொடங்கியது ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் உலக மக்களுக்கு பெரும் இன்னல்களையும், சவால்களையும் தந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கு வல்லரசு நாடுகள் பலவும் வழிதெரியாமல் திணறி வருகின்றனர். தமிழ்நாட்டில் கொரானா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவியதை அடுத்து, அதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒன்றாக தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பித்தது நடைமுறைப்படுத்தி உள்ளது. அதன்  காரணமாக தமிழ்நாட்டில் கொரோனோ வைரஸ் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.

மயிலாடுதுறை: புதிதாக 26 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் தொற்று 500-க்கும் மேற்பட்ட எண்ணிக்கைகளில் நாள்தோறும் பதிவாகிவந்தது. படிப்படியாக குறையத் தொடங்கி இன்று 26 ஆக பதிவாகியுள்ளது. இது நேற்றைய பதிவை விட 5 பேருக்கு அதிகமாக தொற்று கண்டறியபட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 21 ஆயிரத்து 250 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 20 ஆயிரத்து 726 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 26 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 22 பேர் குணமாகி வீடு சென்றுள்ளனர். இந்த சூழலில் இன்று கொரோனா வைரஸ் தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை என்பது ஆறுதல். கொரோனா வைரஸ் தொற்றால் பலியாகியுள்ளனர் எண்ணிக்கை மாவட்டத்தில் 271 ஆக தொடர்கிறது.

மயிலாடுதுறை: புதிதாக 26 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று!

மேலும் கொரோனா வைரஸ் தொற்றிக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோவில், சீர்காழி, புத்தூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா வகைப்படுத்தும் மையம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை என மாவட்டம் முழுவதும் தற்போது 253 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

ஒருகிணைந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 25 ஆயிரத்து 939 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும். முதல் தவணை தடுப்பூசி 3 லட்சத்து 71 ஆயிரத்து 61 பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 54 ஆயிரத்து 878 பேருக்கும் செலுத்தப்பட்டு விட்டதாகவும், கோவாக்சின் 48 ஆயிரத்து 165 பேருக்கு கோவிஷீல்ட் 3 லட்சத்து 77 ஆயிரத்து 774 பேருக்கும் போடப்பட்டுள்ளது எனவும், நகர் பகுதி கிராமங்கள் என மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட  பல்வேறு இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பு ஊசி செலுத்தப்படும் பணி  தொடரப்பட்டுள்ளது என்றும். இன்று மட்டும் 98 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 2 லட்சத்து 11 ஆயிரத்து 154 ஆண்களுக்கும், 2 லட்சத்து 14 ஆயிரத்து 721 பெண்களுக்கும், திருநங்கைகள் 64 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  என  மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் லியாகத் அலி தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
Embed widget