மேலும் அறிய

தஞ்சாவூரில் தொடர் மழை - கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளில் முளைக்கத் தொடங்கிய நெல்மணிகள்

’’50-க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, நெல்மணிகளில் நாற்றுக்கள் முளைக்கத் தொடங்கியுள்ளது’’

தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், கொள்முதல் நிலையத்திலேயே பல நாட்களாக தேங்கியிருப்பதால், தற்போது பெய்து வரும் தொடர் மழையினால் அந்த மூட்டைகளில் நாற்றுக்கள் முளைத்துள்ளது. இதனால் கொள்முதல் பணியாளர்களுக்கு அபராதம் விதிக்க வாய்ப்பு இருப்பதால், பணியாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகங்களிலும் நெல் சாகுபடியில்  விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் விளைவித்த நெல்லை, தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

தஞ்சாவூரில் தொடர் மழை - கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளில் முளைக்கத் தொடங்கிய நெல்மணிகள்

அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு 7.50 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு சந்தை பருவத்தில் (அக்.1 முதல் செப்.30 வரை) 10.54 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது. இதையடுத்து தற்போதைய சந்தை பருவத்தில் இது நாள் வரை 1.95 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்கள் அனைத்தையும் உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களில் உள்ள தனியார் அரவை மில்லுக்கு அனுப்பி, அந்த அரிசியை பொதுவிநியோகத்திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்த்தில் சுமார் 350 கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை மாவட்டத்தில் உள்ள 5 நிரந்தர சேமிப்பு கிடங்குகள் மற்றும் 24 திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் தொடர் மழை - கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளில் முளைக்கத் தொடங்கிய நெல்மணிகள்

தற்போது அனைத்து சேமிப்பு கிடங்குகளில் நெல்மூட்டைகள் அதிக அளவில் இருப்பதால், தற்போது நவம்பர் மாதத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அந்தந்த கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையினால், அங்கு போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால் மாவட்டம் முழுவதும் உள்ள 50-க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, நெல்மணிகளில் நாற்றுக்கள் முளைக்கத் தொடங்கியுள்ளது. இதனால் நெல் மூட்டைகளில் உள்ள நெல் மணிகள் பதறாகி, வீணாகி விடும். இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. விவசாயிகள் கடன் வாங்கி, கஷ்டப்பட்டு சாகுபடி செய்த நெல்லை, கொள்முதல் நிலையங்களில் சேதமடைந்தும், முளைத்து வீணாகி வருவதை பார்த்து விவசாயிகள் வேதனை அடைகின்றனர். இதுகுறித்து கொள்முதல் பணியாளர்கள் கூறுகையில்,

தஞ்சாவூரில் தொடர் மழை - கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளில் முளைக்கத் தொடங்கிய நெல்மணிகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சேமிப்பு கிடங்குகளிலும் நெல்மூட்டைகள் நிரம்பியுள்ளது. மழை பெய்து வருவதால் வெளிமாவட்டங்களுக்கு நெல் மூட்டைகளை அனுப்ப முடியவில்லை. கடந்தாண்டு எதிர்பார்த்ததை விட அதிகளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டாலும், இருப்பு வைக்க இடமில்லை. இதனால் நவம்பர் மாதத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்கள் அந்தந்த கொள்முதல் நிலையத்திலேயே தேங்கியுள்ளது. மழையினால் அந்த மூட்டைகளும் சேதமடைந்து முளைக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஏற்படும் எடை இழப்பு, சேதாரம் ஆகியவறுக்கு பருவகால பணியாளர்களிடம் அபராதமாக வசூலிக்கப்படும் என்பதால் பணியார்கள் கலக்கத்தில் உள்ளோம்.

இதனால் அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றனர். இது குறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி கூறுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்களை மாதந்தோறும் 45 ஆயிரம் மெட்ரிக் டன் வெளி மாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பப்படுகிறது. கடந்தாண்டை காட்டிலும் 50 சதவீதம் நெல் அதிகம் கொள்முதல் ஆனதால், தற்போது சேமிப்பு கிடங்குகளில் அதிகம் நெல் உள்ளது. தொடர் மழையினால் இயற்கை இடர்பாடுகளால் லாரிகளை தொடர்ந்து இயக்க முடியவில்லை. எனவே, கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக 5 தினங்களுக்குள் சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்ல துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget