கார்ப்பரேட் நிறுவன அரசாக மாறும் மத்திய அரசு: எம்.பி., விஜய் வசந்த் குற்றச்சாட்டு
ஆட்சியில் பங்கு என்பது ஒவ்வொரு தொண்டர்களின் கருத்தாக உள்ளது. மேலிட பொறுப்பாளரும், முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

தஞ்சாவூர்: பா.ஜ., அரசு மக்கள் விரோத ஆட்சி நடத்தி வருகிறது. மக்களுக்கு இல்லாமல்,- கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான அரசாக மாறி வருகிறது. அனைத்து துறைகளையும் தனியார்மயமாக்கி வருகிறது.
தஞ்சாவூரில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி., விஜய் வசந்த் நிருபர்களிடம் கூறியதாவது: 100 நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தில் மாநில அரசு 40 சதவீதமும், -மத்திய அரசு 60 சதவீதமும், நிதி பங்கீடு என கொண்டு வந்துள்ளன. இது சாத்தியக்கூறு இல்லை.
ஏற்கனவே, மாநில அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே, இத்திட்டத்தை திரும்ப பெற வேண்டும், மகாத்மா காந்தி பெயரை மீண்டும் வைக்க வேண்டும் என, நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்து வருகிறோம்.
பா.ஜ., அரசு மக்கள் விரோத ஆட்சி நடத்தி வருகிறது. மக்களுக்கு இல்லாமல்,- கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான அரசாக மாறி வருகிறது. அனைத்து துறைகளையும் தனியார்மயமாக்கி வருகிறது. நமது நாட்டில் வேலைவாய்ப்பு இல்லை, இன்னும் வறுமை தீரவில்லை. இதை சரி செய்ய எந்த நடவடிக்கும் மத்திய அரசு எடுக்கவில்லை.
விஜய் இப்போது தான் புதிய கட்சியை துவங்கி சென்று இருக்கிறார். தேர்தல் நெருங்கி நேரத்தில், காலம் பதில் சொல்லும். யார் தீய சக்தி, துாய சக்தி என வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் தெரியவரும். புதியதாக வரும் கட்சி, ஆளும் கட்சியை எதிர்த்து தான் அரசியல் செய்ய வேண்டும். முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். தி.மு.க., கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
ஆட்சியில் பங்கு என்பது ஒவ்வொரு தொண்டர்களின் கருத்தாக உள்ளது. மேலிட பொறுப்பாளரும், முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளனர். கூடிய விரைவில், பேச்சுவார்த்தை துவங்க உள்ளது. இது குறித்து, அகில இந்திய காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும். தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளது. எப்ஐஆர் தவிர்க்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் பல லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட உள்ளனர். பீகாரில் கடைசி நேரத்தில் பல லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. எனவே இதை துல்லியமாக பார்க்க வேண்டும். அகில இந்திய காங்கிரஸ் கட்சி கூடுதல் இடங்களை கேட்கும் போது கன்னியாகுமரி தொகுதி கிடைத்தால் சந்தோஷம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.





















