மேலும் அறிய

இறந்தும் இருவருக்கு உதவிய மாமனிதன்... சோகத்திலும் ஒப்புதல் கொடுத்த குடும்பம்

குருமாணிக்கத்தின் குடும்பத்தினர் ஒப்புதலுடன் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. அவரது கண் தஞ்சை அரசு ராஜா மிராசுதாரர் மருத்துவமனைக்கும், தோல் மதுரை தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டது.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் விபத்தில் மூளைச் சாவு அடைந்த சிறப்பு எஸ்ஐ உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. அவரது கண்கள் மற்றும் தோல் ஆகியவை தானமாக பெறப்பட்டது. தொடர்ந்து அவரது உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.

தஞ்சை மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வந்தவர் குரு மாணிக்கம் (50).  இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு இரண்டு மகன்கள். இந்நிலையில் கடந்த 3ம் தேதி தனது மகனை கல்லூரிக்கு பஸ்ஸில் ஏற்றிவிட்ட பின்னர்  பைக்கில் குரு மாணிக்கம்  வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார்.

அப்போது யாகப்பா நகர் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி குரு மாணிக்கம் படுகாயம் அடைந்தார். உடன் அவரை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் குரு மாணிக்கம் நேற்று மூளைச் சாவு அடைந்தார். இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் குருமாணிக்கத்தின் குடும்பத்தினர் ஒப்புதலுடன் அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. இதை எடுத்து அவரது கண் தஞ்சை அரசு ராஜா மிராசுதாரர் மருத்துவமனைக்கும், தோல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. பின்பு மூளைச்சாவு அடைந்த சிறப்பு எஸ்ஐ குருமாணிக்கத்திற்கு அரசு மரியாதை செய்யப்பட்டது. இதில் தஞ்சை மருத்துவக் கல்லூரி டீல் பொறுப்பு பாலசுப்ரமணியன், ஆர். எம். ஓ செல்வம், மருத்துவர்கள் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, உலக உறுப்பு தான தினம் மற்றும் தேசிய உறுப்பு தான தினம் ஆகியவை கொண்டாடப்படுகின்றன. உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஆகஸ்ட் 13 ம் தேதி உலக உறுப்பு தான தினம் கொண்டாடப்படுகிறது.

உறுப்பு தானம் பற்றிய தவறான கருத்துக்களை மக்களுக்கு உணர்த்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
தேசிய உறுப்பு தான தினம். இந்தியாவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி தேசிய உடல் உறுப்பு தான தினம் கொண்டாடப்படுகிறது. உறுப்பு தானத்தின் உயிர்காக்கும் திறன் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget