மேலும் அறிய
Advertisement
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பயோ மெட்ரிக் முறை - பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை
இத்திட்டத்தின் சிறப்பு ஆண்-பெண் இருபாலருக்கும் சம ஊதியம் வழங்கப்படுகிறது.
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பயோ மெட்ரிக் முறையை கொண்டு வரவேண்டும் என பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பயோ மெட்ரிக் முறையை கொண்டு வரவேண்டுமென மத்திய- மாநில அரசுகளுக்கு பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பருத்திச்சேரி ராஜா கோரிக்கை விடுத்துள்ளார். கிராமப்புற ஏழைகளின் வறுமையை ஒழிக்கவும், விவசாயம் , நீராதாரங்களை மேம்படுத்தவும் பல்வேறு அரசியல் இயக்கங்கள், கிராமப்புற செயற்பாட்டாளர்களின் கோரிக்கையை ஏற்று இச்சட்டம் 2005 ஆம் ஆண்டு இயற்றப்பட்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் நடைமுறைப் படுத்தபடுகிறது.
இத்திட்டத்தின் சிறப்பு ஆண்-பெண் இருபாலருக்கும் சம ஊதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பணியாளர்களின் வருகையை உறுதி செய்ய ENMR முறை கடைப்பிடிக்கப்படுகிறது. சில கிராம ஊராட்சிகளில் பணியாளர்களின் வருகையை உறுதி செய்யும் நிழற்படம் எடுக்காமலேயே சிலருக்கு மட்டும் சாதகமாக வருகை பதிவு உறுதி செய்யப்பட்டு அரசின் நிதி நூதன முறையில் திருடப்படுகிறது. இக்குறைப்பாட்டை நீக்க அரசு உடனடியாக பயோ மெட்ரிக் முறையில் பணித்தளத்தில் கைரேகை பதிவின் மூலம் பணியாளர்களின் வருகைப் பதிவை உறுதி செய்யும் முறையை கொண்டு வரவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டால் 100 நாள் வேலை திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகள் தவிர்க்கப்படும். குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் உள்ள கூலித் தொழிலாளர்கள் இந்த நூறு நாள் வேலை திட்டத்தின் மூலமாக அவர்களின் அன்றாட தேவை என்பது பூர்த்தி செய்யப்பட்டு வரும் நிலையில் பல்வேறு நபர்கள் முறைகேட்டில் ஈடுபட்ட வருகிறார்கள். இதனை தடுக்கும் வகையில் பயோமெட்ரிக் முறையை கொண்டு வர வேண்டும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion