மேலும் அறிய

BHEL : 'திருச்சி பெல் நிறுவனத்தில் பயிற்சி' உடனே அப்ளை பண்ணுங்க - வேலையில் சேருங்க..!

முழு நேர கல்வியில் படித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். பகுதி நேரம், தொலைத்தூர கல்வியில் முடித்தவர்கள் விண்ணப்பிக்க இயலாது. ஐடிஐ முடித்தவர்களுக்கு விதிமுறைகளின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படும்.

தஞ்சாவூர்: திருச்சி BHEL நிறுவனத்தில் 760 காலிப்பணியிடங்கள் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.  ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு இது செம வாய்ப்பு. மிஸ் பண்ணிடாதீங்க. தமிழ்நாட்டிலேயே மத்திய அரசு நிறுவனத்தில் தொழிற்பயிற்சி பெற விரும்புகிறவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு. மொத்தம் 760 இடங்களுக்கு திருச்சியில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் தொழிற்பயிற்சி வழங்கப்படுகிறது. இதன் மூலம் உதவித்தொகையுடன் பட்டதாரிகள், டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் ஐடிஐ முடித்தவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இதன் மூலம் பணிக்கான அனுபவத்தை பெறும் வாய்ப்பை இளைஞர்கள் பெறுகின்றனர். மேலும், வேலைவாய்ப்புகளிலும் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்களுக்கு திருச்சியில் அமைந்துள்ள பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் (BHEL) பயிற்சி பெற வாய்ப்பு வழங்கப்படுகிறது.

ஐடிஐ பிரிவில் - 550 பணியிடங்கள், டிப்ளமோ பிரிவில் - 90 பணியிடங்கள், பட்டப்படிப்பு தகுதி பிரிவில் - பணியிடங்கள் என மொத்தம் 760 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

டிரேட் அப்ரண்டிஸ் 550
டெக்னீஷியன் அப்ரண்டிஸ் 90
பட்டப்படிப்பு அப்ரண்டிஸ் 120
மொத்தம் 760

டிரேட் அப்ரண்டிஸ் பிரிவில் பிட்டர், வெல்டர், எலெக்ட்ரிஷியன், டர்னர், மெக்கானிஸ்ட், இன்ரூமெண்ட் மெக்கானிஸ்ட், மோட்டார் மெக்கானிக், மெக்கானி ஆர் & ஏசி மற்றும் COPA ஆகிய பிரிவுகளில் இடங்கள் நிரப்பப்படுகிறது.

டெக்னீஷியன் அப்ரண்டிஸ் பிரிவில் மெக்கானிக்கல், கணினி பொறியியல்/ தகவல் தொழில்நுட்பம், சிவில் பொறியியல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பொறியியல், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொறியியல் ஆகியவற்றில் 90 இடங்கள் நிரப்பப்படுகிறது.

பட்டப்படிப்பு தகுதிக்கான அப்ரண்டிஸ் பிரிவில் மெக்கானிக்கல், கணினி அறிவியல், சிவில், எலெல்க்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கணக்கியல் மற்றும் எச்.ஆர் பிரிவில் 120 இடங்கள் நிரப்பப்படுகிறது.

இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1-ம் தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபடியாக 27 வயது வரை இருக்கலாம். ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள், எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள் வரை தளர்வு உள்ளது.

டிரேட் அப்ரண்டிஸ் பதவிக்கு பள்ளி படிப்பிற்கு பின்னர், அந்தந்த பிரிவுகளில் ஐடிஐ தகுதி பெற்றிருக்க வேண்டும். டெக்னீஷியன் அப்ரண்டிஸ் பதவிக்கு அந்தந்த பாடப்பிரிவுகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பட்டப்படிப்பு அப்ரண்டிஸ் பதவிக்கு அந்தந்த பொறியியல் பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணக்கியல் பாடப்பிரிவில் பி.காம் முடித்திருக்க வேண்டும். எச்.ஆர் உதவியாளர் பதவிக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.A முடித்திருக்க வேண்டும்.

முழு நேர கல்வியில் படித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். பகுதி நேரம், தொலைத்தூர கல்வியில் முடித்தவர்கள் விண்ணப்பிக்க இயலாது. ஐடிஐ முடித்தவர்களுக்கு தொழிற்பயிற்சியின் விதிமுறைகளின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படும்.

டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.11,000 உதவித்தொகை வழங்கப்படும். பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.12,000 உதவித்தொகை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 1 வருடம் பயிற்சி அளிக்கப்படும். விண்ணப்பதார்களின் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கு முன்பாக ஐடிஐ தகுதி பெற்றவர்கள் https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையதளத்திலும், டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு தகுதி உள்ளவர்கள் https://nats.education.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதனைத்தொடர்ந்து, https://trichy.bhel.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். வரும் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். காலதாமதம் செய்யாமல் இந்த சூப்பர் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உடனே விண்ணப்பத்தை அனுப்பிடுங்க.

தலைப்பு செய்திகள்

நெல்மணிகளை காக்க விவசாயிகளின் புதிய முயற்சி... வயல்களில் ஜிகினா பேப்பர் பளபளக்குது
நெல்மணிகளை காக்க விவசாயிகளின் புதிய முயற்சி... வயல்களில் ஜிகினா பேப்பர் பளபளக்குது
அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்தணும்... 50 கிராம மக்களின் வலியுறுத்தல்
அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்தணும்... 50 கிராம மக்களின் வலியுறுத்தல்
பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு சூப்பர் வாய்ப்பு! சிறப்பு கடன் முகாம்... எங்கே? எப்போது?
பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு சூப்பர் வாய்ப்பு! சிறப்பு கடன் முகாம்... எங்கே? எப்போது?
ஆலக்குடியில் பெயர் பலகைக்கு வந்த சோதனை! போஸ்டர்களால் முழுவதும் மறைப்பு... வழிதெரியாமல் தவிக்கும் பயணிகள்
ஆலக்குடியில் பெயர் பலகைக்கு வந்த சோதனை! போஸ்டர்களால் முழுவதும் மறைப்பு... வழிதெரியாமல் தவிக்கும் பயணிகள்

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Nana Padekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
TN Weather News: 22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
Embed widget