மேலும் அறிய

பயிர் வளம் சிறந்து பண வளம் கொழிக்க உதவும் அசோலா: மண்வளம் காக்கும் விவசாயிகளின் நண்பன்

அசோலா நீரில் வாழும் ஒரு வகை பெரணித் தாவரம். இது மிகச்சிறிய இலைகளையும், வேர்களையும் கொண்டது. ஆனால் இவற்றிற்கு மற்ற தாவரங்களைப் போல் தண்டுப்பகுதி கிடையாது.

தஞ்சாவூர்: உழவர்கள் கடினமாக உழைத்தாலும் நிலவளம் இன்றிப் பயிர் வளம் சிறக்காது. நிலத்திற்கு ஏற்பவே விளைவு சிறக்கும் என்பதை உழவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். அத்தகைய மண்வளத்தைக் காக்க அங்கக வேளாண்மை செய்வது நலம். நெற்பயிரில் அசோலா மற்றும் நீலப்பச்சைப்பாசி தழைச்சத்தை காப்பதில் அசோலா அளித்து மண்வளத்தைக் பெரும் பங்கு வகிக்கின்றன.

மண் வளத்தை அதிகரித்தால் மகசூலும் அதிகரிக்கும். இயற்கை தந்த வரம், உயிர் உரம். நெல் வயலுக்கு ஏற்ற அசோலா  பயன்படுத்துங்கள் பலனை அடையுங்கள் என்று தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை துறையினர் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி உள்ளனர்.

அசோலா நீரில் வாழும் ஒரு வகை பெரணித் தாவரம். இது மிகச்சிறிய இலைகளையும், வேர்களையும் கொண்டது. ஆனால் இவற்றிற்கு மற்ற தாவரங்களைப் போல் தண்டுப்பகுதி கிடையாது. இலைப்பகுதி நீர்ப்பரப்பின் மேல் மிதந்தும், வேர்ப்பகுதி நீரில் அமிழ்ந்தும் காணப்படும். இலையின் மேல்பகுதி நல்ல பச்சை நிறமாகவும், கீழ்ப்பகுதி வெளிறிய பச்சை நிறத்துடனும் இருக்கும். அசோலாவின் வேர் பழுப்பு நிறமாக, நெற்பயிரின் வேரைப் போன்று சல்லி வேராக இருக்கும். ஆனால், மிகச்சன்னமாக காணப்படும். இதன் இலைகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்தாற்போல, மிக நெருக்கமாகவும், கிளைத்தும் காணப்படும்.

அசோலா அசோலா என்று சொல்லும் போது தாவரத்தையும், இலைக்குழியில் தங்கி அதன் வாழும் நீலப்பச்சைப்பாசி எனும் நுண்ணுயிரியையும் சேர்த்துக் குறிக்கும். அசோலாவில் இலையின் மேற்புறத்தின் உட்பகுதியில் அனாபினா அசோலா என்றழைக்கப்படும் நீலப்பச்சைப்பாசி வளர்ந்து, காற்று மண்டலத்தில் உள்ள தழைச்சத்தைக் கிரகித்து அசோலாவிற்கு கொடுக்கிறது. அசோலா தன்னிடத்தில் உள்ள பச்சையத்தின் மூலம் ஒளிச் சேர்க்கை செய்து அந்த உணவுப் பொருளை நீலப்பச்சைப் பாசிக்கு கொடுக்கிறது. இவ்வாறு அசோலாவும், நீலப்பச்சைப்பாசியும் ஒருங்கிணைந்த கூட்டு வாழ்க்கை வாழ்ந்து கிரகிக்கின்ற தழைச்சத்தை நெற்பயிருக்கு அளித்து பயிரின் வளர்ச்சினை ஊக்குவிக்குகின்றன.

இந்த அசோலா நீர் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் வளரும் தன்மை கொண்டது. எனினும், சேற்றுடன் கலந்த நெல் வயலில் நன்கு வளர்கின்றன. அசோலாவில் பல வகைகள் இருந்த போதிலும், சில இரகங்கள் நமது தமிழ்நாட்டு தட்ப வெப்பநிலைக்கு ஏற்றவையாக உள்ளன. பொதுவாக நம் நாட்டில் அசோலா மைக்ரோஃபில்லா என்ற இரகம் அதிக வெப்ப நிலையைத் தாங்கி நன்கு வளர்வதோடு, அதிக அளவு தழைச் சத்தையும் கிரகிக்கக் கூடியதாகவும் உள்ளது.

அசோலா பெரும்பாலும் கோடை காலப் பருவத்தை தவிர மற்ற பருவங்களில் நன்கு வளரும். மழைக் காலங்களிலும், வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் காலங்களிலும் நன்கு வளரும். தண்ணீர் வற்றி வறண்டுவிட்டால் அசோலா காய்ந்து விடும். எனவே தொடர்ந்து தண்ணீர் நிலத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம். மேகமூட்டமான காலங்களிலும், நெற்பயிரின் நிழலிலும் இவை நன்கு வளரும். காரத் தன்மையுள்ள மண்ணில் வளர்ச்சி சற்று பாதிக்கப்படும்.

அசோலாவை நெற்பயிர் நட்ட ஒரு வாரத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் 100 கிலோ இட வேண்டும். 20 முதல் 25 நாட்களில் 10 டன் வரை அசோலா பெருக்கமடையும். அப்பொழுது தண்ணீரை வடிகட்டி களை எடுக்கும் ஆட்களைக் கொண்டு அசோலாவை வயலில் மிதித்து விடுவதால் அவை மக்கி தழை உரமாக நெற்பயிருக்கு கிடைக்கிறது. முதல் களையெடுப்பின் போது மிதிபடாது மிதந்து நிற்கும் அசோலா மீண்டும் வளர்ந்து வயல் முழுவதும் பரவிவிடும். இதன் போது மண்ணில் மக்கி தழை உரமாகிறது.

அசோலாவை மூன்று வகைகளில் வளர்த்து நெற்பயிருக்கு இடலாம். நாற்றங்காலில் வளர்த்தல், நெற்பயிரோடு வளர்த்தல்,  நடவு வயலில்தழை உரமாக வளர்த்தல், நாற்றங்காலில் வளர்த்தல்.

அசோலாவை நாற்றங்காலில் உற்பத்தி செய்வதற்கு முதலில் நிலத்தை தயார் செய்ய வேண்டும். இதற்கு நிலத்தை ஒரு சென்ட் அளவு கொண்ட பாத்திகளாக பிரிக்க வேண்டும். இந்த பாத்தியின் அகலம் 2 மீட்டருக்கு மிகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஏனெனில், அசோலா வளர்ச்சி அடைந்த பிறகு பாத்திகளுக்கு வெளியிலிருந்தபடியே எடுக்க வேண்டும். உள்ளே இறங்கி எடுத்தால் அசோலா மிதிபடும்.

நெற்பயிரோடு வளர்த்தல்: தனியாக நாற்றங்கால் அமைக்க நிலம் இல்லாத நிலையிலும், நாற்றுகள் நடவுக்கு தயாராகி விட்ட நிலையிலும், நடவு வயலில் நாற்று நட்டு விட்ட நிலையிலும் அசோலாவை நாற்றங்காலில் வளர்த்து வயல் வெளியில் இடுவது இயலாது. அத்தகைய நிலையில் நெல் வயலில் நடவு செய்த ஒரு வாரத்திற்கு பிறகு நேரடியாக அசோலாவை ஏக்கருக்கு 100 கிலோ என்ற அளவில் இடலாம். 20 முதல் 25 நாட்களில் இது நன்கு வளர்ந்து வயல் முழுவதும் பரவிவிடும். இந்த அசோலாவை முன்பு குறிப்பிட்டது போல் முதல் மற்றும் இரண்டாம் களையெடுப்பின் போது மிதித்து விடவேண்டும்.

அசோலாவை தழை உரமாக இடுதல்: பசுந்தாள் உரங்களை நெல் வயலிலேயே வளர்த்து உழவு செய்து விடுவது போல் அசோலாவை நடவு செய்ய வேண்டிய வயலில் இட்டு வளர்த்து, நடவு செய்வதற்கு ஒரு வாரம் முன்பு அசோலாவை மடக்கி உழுது மக்கச் செய்து பிறகு நாற்று நடுவது சிறந்தது. அசோலாவின் வேர்கள் முதிர்ச்சி அடைந்தவுடன் அவை செடியினின்று விடுபட்டு சேற்றுடன் கலந்து மக்கி அதிலிருக்கும் தழைச்சத்து நெற்பயிருக்கு கிடைக்கிறது.

அசோலாவினால் நெற்பயிருக்கு உண்டாகும் பயன்கள்: அசோலா குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய உயிர் உரம், ஒரு கிலோ பத்து ரூபாய் என்ற விலையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி நிலையங்களில் கிடைக்கிறது.

குறைந்த செலவில் அதிக பலனளிக்கிறது. அதாவது தழைச்சத்தின் தேவையில் 25 சதவீதம் வரை ஈடுகட்டுகிறது. வேகமாக வளரும் தன்மை கொண்டுள்ளதால் குறைவான அளவு வயலில் இட்டால் போதுமானது. நீரின் மேற்பரப்பு முழுவதும் படர்ந்து வளர்வதால் களைகள் வளர்வது பெருமளவில் கட்டுப்படுத்தப்படுகிறது.

மேலும் நீர் அதிகளவு ஆவியாகாமல் தடுக்கப்பட்டு நீரிழப்பு குறைகிறது. அசோலா இடுவதால் 15 முதல் 20 சதவீதம் வரை கூடுதல் விளைச்சல் கிடைக்கக்கூடும் என்று முடிவுகள் கூறுகின்றன. விவசாயத்தோடு மீன் வளர்ப்பு, கோழி வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவற்றை உபதொழில்களாக செய்து வருபவர்கள் அசோலாவை அவற்றிற்கு 5 சதவீதம் என்ற அளவில் தீவனமாக பயன்படுத்தலாம். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
Trump on US Citizenship: 2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
Trump on US Citizenship: 2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
Chennai Power Cut: சென்னையில் டிசம்பர் 19-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
சென்னையில் டிசம்பர் 19-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
Embed widget