மேலும் அறிய

விளையாட்டுத்துறையில் தமிழர்களுக்கு செய்யப்படும் அரசியல் - சிலம்பாட்ட வீராங்கணை சினேகா வேதனை..!

விளையாட்டுத்துறை அரசியலால், மற்ற மாநில வீரர்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், தமிழகத்திலிருந்து சென்ற எங்களுக்கு கொடுக்கப்படவில்லை. இதனால், சிறப்பாக விளையாடியும், எங்களது வெற்றி பறிக்கப்பட்டது

சிலம்பாட்டம் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது. சிலம்பம் மற்றும் காய் சிலம்பம் (குத்துவரிசை) போன்ற தசை விரைவு மற்றும் வளைந்து கொடுக்கும் தன்மை, கையும் கண்ணும் ஒருங்கிணைப்பு, காலும் கண்ணும் ஒருங்கிணைப்பு, உடல் சமநிலை, தசை ஆற்றல், வேகம், தசை வலிமை மேம்படுத்தும். சிலம்பம் சுற்றுவதால், சீரான மூச்சு, அழுத்தம், சர்க்கரை நோய், உடலிலுள்ள எழும்புகள்,தசைகள் திடப்படும், எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்குவதற்கான ஏற்ற விளையாட்டாகும். சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும்.

விளையாட்டுத்துறையில் தமிழர்களுக்கு செய்யப்படும் அரசியல் - சிலம்பாட்ட வீராங்கணை சினேகா வேதனை..!

சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக்கம்பினால் தொடுதல் (தொடு புள்ளி) போன்றன அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. தற்காலத்தில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் சிலம்பாட்டத்தைக் கற்று விளையாடி வருகின்றனர். திருவிழா, கோயில் விழாக்கள், மற்றும் ஊர்வலங்களில் சிலம்பாட்டம் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது. மெய்ப்பாடம், உடற்கட்டு, மூச்சுப்பயிற்சி, குத்துவரிசை, தட்டுவரிசை, அடிவரிசை, பிடிவரிசை, சிலம்பாட்டம், வர்மம் முதலானவை சிலம்பக்கலையின் முக்கியக் கூறுகளாகும். ஒருவர் சிலம்பக்கலையைக் கற்றுக் கொள்ள வேண்டுமாயின், அடிப்படையில் துவங்கி படிப்படியாகக் இவற்றைக் கற்பதன் மூலம் சிலம்பக்கலையின் பல்வேறு உட்கூறுகளைத் தம்முள் அடையலாம்.

விளையாட்டுத்துறையில் தமிழர்களுக்கு செய்யப்படும் அரசியல் - சிலம்பாட்ட வீராங்கணை சினேகா வேதனை..!

துடுக்காண்டம், குறவஞ்சி, மறக்காணம், அலங்காரச்சிலம்பம், போர்ச்சிலம்பம், பனையேறி மல்லு, நாகதாளி, நாகசீறல், கள்ளன்கம்பு, நாகம்பதினாறு ஆகியவை சிலம்பாட்டத்தின் வகைகளாகும். இத்தகைய சிறப்பு பெற்ற தமிழர்களின் பாரம்பரியமானதும், பழங்காலத்து விளையாட்டான சிலம்பாட்டத்தை, தஞ்சை மாவட்டம் பள்ளியக்கிரஹாரத்தை சேர்ந்த ரவிக்குமார்-ராஜலெட்சுமியின் இரண்டாவது மகள் சினேகா (18) சுமார் 50 க்கும் மேற்பட்ட கிராமத்திலுள்ள பள்ளிக்குழந்தைகளுக்கு பயிற்சியளித்து வருகின்றார். சினேகா, தற்போது அரசு பெண்கள் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு பி.காம் படித்து வருகின்றார். அரசு பள்ளியில், 6 ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது, சிலம்பாட்ட ஆசிரியர் அளித்த பயிற்சியால், ஈர்க்கப்பட்டு சிலம்பாட்டதை கற்று கொண்டு தேசிய, மாநில, மாவட்ட அளவில் விளையாடி பல பதக்கங்களையும், கோப்பைகளையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

விளையாட்டுத்துறையில் தமிழர்களுக்கு செய்யப்படும் அரசியல் - சிலம்பாட்ட வீராங்கணை சினேகா வேதனை..!

டெல்லியில் நடந்த தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியின் போது, மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள், தமிழகத்திலிருந்து சென்ற சிலம்பாட்ட வீரர்களை புறக்கணித்தால், வெற்றி வாய்ப்பை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் தாக்கமாக தற்போது சினேகா,தங்கள்  கிராம பகுதிகளிலுள்ள  பள்ளி குழந்தைகளுக்கு சிலம்பாட்ட பயிற்சியளித்து, அவர்களை தற்போது பல்வேறு மாவட்டங்களுக்கு அழைத்து சென்று வெற்றி பெறச்செய்து, தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். மேலும், பறிக்கப்பட்ட தனது வெற்றியை மீண்டும் முயறிசிகளில் தீவிரம் காட்டி வருகின்றார்.

விளையாட்டுத்துறையில் தமிழர்களுக்கு செய்யப்படும் அரசியல் - சிலம்பாட்ட வீராங்கணை சினேகா வேதனை..!

இந்த இளம் வயதில், கல்லூரி படிப்பையும் தொடர்ந்து கொண்டு,  பயிற்சியாளரான 18 வயது ஆன சினேகா, தனக்கு ஏற்பட்ட புறக்கணிப்பு போல் வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்பதற்காக, தன்னை போன்ற ஏழை கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு தினந்தோறும் காலை, மாலை நேரங்களில் சிலம்பாட்ட பயிற்சியளித்து வருகிறார். தமிழக அரசு சிலம்பாட்டத்திற்கு உரிய அங்கீகாரம் பெற்று தர வேண்டும், சிலம்பாட்டத்தை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கட்டாயமாக்கப்பட வேண்டும், தமிழகத்திலிருந்து வெளி மாநிலத்திற்கு செல்லும் சிலம்பாட்டம் போட்டியில் கலந்து கொள்ள செல்லும், விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசே, உரிய ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து கல்லுாரி மாணவியும், சிலம்பாட்ட பயிற்சியாளருமான சினேகா கூறுகையில்,

விளையாட்டுத்துறையில் தமிழர்களுக்கு செய்யப்படும் அரசியல் - சிலம்பாட்ட வீராங்கணை சினேகா வேதனை..!

எனது தந்தையார் கேபிள் டிவியில், தினக்கூலி வேலை செய்து வருகின்றார். தாயார் வீட்டில் உள்ளார். நான் 11 வயதில் 6 ஆம் வகுப்பு அரசு பெண்கள் பள்ளியில் படித்து கொண்டிருந்தேன். அப்போது சிலம்பாட்ட ஆசிரியர் அய்யப்பன், சிலம்பாட்டத்தை பற்றி பயிற்சியளித்ததை பார்த்து தான், சிலம்பாட்டத்தை கற்றுக்கொள்ள தொடங்கினேன். தஞ்சை மாவட்டத்திலேயே சிறப்பாக விளையாடியதால்,  மாநில அளவில் 10 போட்டிகளில் கலந்து கொண்டு அனைத்திலும் வெற்றி பெற்றேன். தேசிய அளவில் ஒரு போட்டியில் கலந்து கொண்டுள்ளேன். அப்போது டெல்லயில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டேன். விளையாட்டுத்துறை அரசியலால், மற்ற மாநில விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், தமிழகத்திலிருந்து சென்ற எங்களுக்கு கொடுக்கப்படவில்லை. இதனால், சிறப்பாக விளையாடியும், எங்களது வெற்றி பறிக்கப்பட்டது. அப்போது தமிழகத்திலிருந்து சென்றவர்களுக்கு ஆதரவாக பேசுவதற்கு யாரும் இல்லாதது வேதனையான விஷயமாகும்.இது எனக்கு வேதனையும், அழுகையும், ஆத்திரமும், மனவிரக்தியும் ஏற்பட்டது.

விளையாட்டுத்துறையில் தமிழர்களுக்கு செய்யப்படும் அரசியல் - சிலம்பாட்ட வீராங்கணை சினேகா வேதனை..!

என்னால் சிலம்பாட்டம் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அதனை வெளி உலகத்திற்கு காட்டு விதமாகவும், என்னை போன்ற ஏழை கிராமப்புற மாணவர்களும் சிலம்பாட்டத்தை கற்க வேண்டும் என நோக்கிலும், பள்ளி குழந்தைகள், 50க்கும் மேற்பட்டவர்களுக்கு சிலம்பாட்ட பயிற்சிளித்து, அவர்களை  மாவட்ட மற்றும் மாநில அளவில் வெற்றி பெறவைத்து வருகின்றேன். எனக்குள் ஏற்பட்ட வைராக்கியத்தால், பயிற்சி பெறும் மாணவர்களையும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளசெய்து வெற்றி பெறச்செய்வேன் என்ற உறுதியுடன் இருக்கின்றேன்.

தற்போது சிலம்பம், கத்தி சுற்றுதல், சுருள், வேல்கம்பு போன்று பல்வேறு கலைகளை பயிற்சியளித்து வருகின்றேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை, திருவொற்றியிரில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில், 32 அணிகள் கலந்து  கொண்டனர். இதில் அனைத்து சுற்றுகளிலும் கலந்து கொண்டதில்,  மாநில அளவில் மூன்றாவது இடத்தை எனது அணியினர் பிடித்துள்ளனர். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டத்திற்கு தமிழகத்தில் உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. கடமைக்காக தற்போது ஒரு சில இடங்களில் போட்டிகள் நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுத்துறையில் தமிழர்களுக்கு செய்யப்படும் அரசியல் - சிலம்பாட்ட வீராங்கணை சினேகா வேதனை..!

மற்ற விளையாட்டுக்களில் விளையாடும் வீரர்களுக்கு, தமிழக அரசோ, தனியார் நிறுவனங்களோ உரிய ஆதரவும், அங்கீகாரம் வழங்கும் போது, சிலம்பாட்டத்தை மற்றும் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனையான செயலாகும். எனவே, தமிழக அரசு, சிலம்பாட்டத்திற்கு உரியஅங்கீகாரம் வழங்க வேண்டும், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிலம்பாட்டத்தை பாடமாக அறிவிக்க வேண்டும், சிலம்பாட்ட போட்டிகளில் அரசியல் நுழைவதை களையெடுக்க வேண்டும், என்னை போன்ற பெண்கள் சிலம்பாட்ட பயிற்சியாளர்களையும், மாணவர்களையும் ஊக்குவிக்கவும், முன்னெடுத்து செல்லவும், மற்ற விளையாட்டுகளுக்கு கொடுக்கும் முக்கியவத்தை,  தமிழக அரசு சிலம்பாட்டத்திற்கு வழங்க வேண்டும் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! 
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! அதிர்ச்சி வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Issue : 15 வழக்குகள்...திமுக நிர்வாகி!RAPIST ஞானசேகரனின் பின்னணி!யார் யாருடன் தொடர்பு?RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! 
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! அதிர்ச்சி வீடியோ
"நியூ இயர் கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது" கறாராக சொன்ன டி.கே. சிவகுமார்!
சட்டம் - ஒழுங்குக்கு அர்த்தமே தெரியாத மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் எல்.முருகன் காட்டம்
சட்டம் - ஒழுங்குக்கு அர்த்தமே தெரியாத மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் எல்.முருகன் காட்டம்
செய்யாருக்கு குட் நியூஸ்.. மாறும் திருவண்ணாமலை.. களத்துக்கு வந்த முக்கிய நிறுவனம்..!
செய்யாருக்கு குட் நியூஸ்.. மாறும் திருவண்ணாமலை.. களத்துக்கு வந்த முக்கிய நிறுவனம்..!
மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
Embed widget