மேலும் அறிய
Advertisement
Tiruvarur: சட்டமன்ற மனுக்கள் குழுவினரிடம் ஆஜராகாத நில அளவையர் பணியிடை நீக்கம் - உதவி இயக்குனர் உத்தரவு
சட்டமன்ற மனுக்கள் குழுவினரிடம் ஆஜராகாத நில அளவையரை பணியிடை நீக்கம் செய்து திருவாரூர் மாவட்ட நில அளவை மற்றும் பதிவேடுகள் உதவி இயக்குனர் உத்தரவு.
நகர நில அளவைகளில் குறைபாடுகள் இருப்பதாக கூறி, திருவாரூர் மாவட்ட நில அளவை மற்றும் பதிவேடுகள் உதவி இயக்குனர் தேவராஜன், ராஜமாணிக்கத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகர நிலவரித் திட்ட நில அளவையராக ராஜமாணிக்கம் என்பவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டமன்ற மனுக்கள் குழுவினர் வருகை தந்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் குறித்தும் அதற்கு அரசு அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் சட்டமன்ற மனுக்கள் குழுவின் தலைவர் செழியன் தலைமையில் உறுப்பினர்கள் ஆய்வில் ஈடுபட்டனர். அப்பொழுது கூத்தாநல்லூர் நகர நில அளவையர் ராஜமாணிக்கம் மேற்கொண்ட நகர நில அளவைகளில் குறைபாடுகள் இருப்பதாக சட்டமன்ற மனுக்கள் குழுவினருக்கு புகார் மனு பெறப்பட்டது. இது குறித்து ராஜமாணிக்கத்திடம் சட்டமன்ற மனுக்கள் குழுவினர் விவரம் கேட்டறிய முற்பட்ட பொழுது குழுவினர் முன்பு ராஜமாணிக்கம் ஆஜராகவில்லை.
இந்த நிலையில், நகர நில அளவைகளில் குறைபாடுகள் இருப்பதாக கூறி நில அளவையர் மீது நடவடிக்கை எடுக்க சட்டமன்ற மனுக்கள் குழுவினர் பரிந்துரை செய்தனர். அதனை அடுத்து திருவாரூர் மாவட்ட நில அளவை மற்றும் பதிவேடுகள் உதவி இயக்குனர் தேவராஜன், ராஜமாணிக்கத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மனுக்கள் குழு சார்பில் குழு தலைவர் அரசு தலைமை கொறடா கோவி செழியன் தலைமையில் சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு உறுப்பினர்கள் ஐயப்பன், கந்தசாமி, சுந்தரராஜன், பாபு, பொன்னுசா,மி ராதாகிருஷ்ணன், முத்துராஜா ஆகியோர் பங்கு பெற்ற 2023-2024 ஆம் ஆண்டிற்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உள்ளிட்ட பல துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் மீது பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் அறிக்கை பெறப்பட்டு நேற்று தீர்வு செய்யப்பட்டு மனுக்கள் மீது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 26.07.2013 அன்று குழு ஆய்வு மேற்கொண்டு 29.10.2013 அன்று 14வது பேரவையின் மனுக்கள் குழுவால் பேரவைக்கு அளிக்கப்பட்ட 32வது அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்ட 20 மனுக்கள் மீது குழு மறு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் அலுவலர்கள் மனுக்கள் மீது உரிய பதிலளித்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக திருவாரூர் நகரத்திற்குட்பட்ட மருதப்பட்டினம் நடைபாலம் பகுதியில் சாலை அமைப்பது குறித்த மனுவின் அடிப்படையிலும் விளமல் பகுதியில் உள்ள பதஞ்சலி மனோகர் ஆலயத்தில் வசந்த மண்டபம் கட்டுவது குறித்த மனுவின் அடிப்படையிலும் நேரடியாக அந்த இடங்களுக்கு சென்று சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு ஆய்வு செய்தது.இந்த நிகழ்வில் மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் ஊரக வளர்ச்சி குழுவின் திட்ட இயக்குனர் சந்திரா உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
விளையாட்டு
தமிழ்நாடு
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion