மேலும் அறிய

தூய்மைப்பணியாளர்கள் என்றால் இளக்காரமா? அதிரடியாய் களத்தில் இறங்கி மறியல் போராட்டம்

தூய்மைப் பணியாளர்கள் என்பதால் தரக்குறைவாகவும், இலவச பேருந்து என்பதால் ஏற்ற மறுக்கின்றனர் என்று கூறி தூய்மைப்பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேருந்துகளை மறித்து போராட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர்: தூய்மைப் பணியாளர்கள் என்பதால் தரக்குறைவாகவும், இலவச பேருந்து என்பதால் ஏற்ற மறுக்கின்றனர் என்று கூறி தூய்மைப்பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேருந்துகளை மறித்து போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தூய்மைப்பணியாளர்கள் குற்றச்சாட்டு

இலவச பேருந்து என்று பேருந்தில் ஏற்ற மறுக்கின்றனர். தூய்மை பணியாளர்கள் என்பதால் தரகுறைவாகும் நடத்துகின்றனர் என்று கூறி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துகளை மறித்து இன்று காலை போராட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தஞ்சை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அருகில் உள்ள கிராம பகுதியிலிருந்து தஞ்சை பழைய பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பணிக்காக செல்ல வேண்டும். இதனால் அவர்கள் நகர பேருந்துகளில் செல்வது வழக்கம். தினமும் இரண்டு அல்லது மூன்று பேருந்துகள் இறங்கி மாறி செல்லும் நிலையும் உள்ளது.

பேருந்துகளில் ஏற்ற விடுவதில்லை

இந்நிலையில் இவர்கள் செல்லும் நேரத்தில் பேருந்துகளை முறையாக இயக்குவதில்லை. அவ்வாறு இயக்கும் பேருந்தில் ஏற்ற விடுவதில்லை. பேருந்துகளில் ஏற்ற மறுப்பு தெரிவிக்கின்றனர்.  தங்களை கண்டால் பேருந்துகளை நிறுத்தத்தில் நிறுத்தாமல் வேகமாக சென்று விடுகின்றனர் என பல குற்றச்சாட்டுக்களை தூய்மைப்பணியாளர்கள் தெரிவித்து வந்தனர்.

பழைய பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல்

இதற்கிடையில் இன்று காலையும் பேருந்துகளில் தங்களை ஏற்ற மறுப்பு தெரிவித்ததாக கூறிய தூய்மை பணியாளர்கள் இதனை கண்டித்து தஞ்சை பழைய பேருந்து நிலையத்தின் முன்பு தரையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்

காலை நேரம் என்பதால் அலுவலகத்திற்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டனர். சுமார் 45 நிமிடங்கள் இந்த போராட்டம் நடந்தது. தொடர்ந்து போராட்டம் நடத்திய தூய்மைப்பணியாளர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்நிலையில் தஞ்சை மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள அவசர ஊர்தி தஞ்சை பழைய பேருந்து நிலையம் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பணிக்காக அழைத்து சென்றது.

கோட்ட பொது மேலாளர் நடவடிக்கை

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை இன்று காலை நகர பேருந்தில் ஏற்ற மறுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பேருந்தில் ஏற்ற‌ மறுத்த நடத்துனர் யேசுதாஸ் மற்றும் மாற்று நடவடிக்கை எடுக்காத நேர காப்பாளர் ராஜா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இருவரையும் பணியிடை மாற்றம் செய்து கும்பகோணம் கோட்ட பொது மேலாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக உபரி பட்ஜெட்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் பெருமிதம்
தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக உபரி பட்ஜெட்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் பெருமிதம்
இன்ஜினியரிங் முடித்தவர்கள் கவனத்திற்கு... செம வேலை வாய்ப்பு உங்களுக்காக!!!
இன்ஜினியரிங் முடித்தவர்கள் கவனத்திற்கு... செம வேலை வாய்ப்பு உங்களுக்காக!!!
திருச்சிக்கு வரும் 11ம் தேதி வருகை புரியும் பிரதமர் மோடி... பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
திருச்சிக்கு வரும் 11ம் தேதி வருகை புரியும் பிரதமர் மோடி... பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
தஞ்சாவூர் பெரிய கோயிலில் இன்று சித்திரை திருவிழா பந்தக்கால் முகூர்த்தம்
தஞ்சாவூர் பெரிய கோயிலில் இன்று சித்திரை திருவிழா பந்தக்கால் முகூர்த்தம்
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UPSC Toppers List: யுபிஎஸ்சி தேர்வில் மதுரை மாணவி சாதனை: தமிழ்நாட்டின் ராஜேஸ்வரிக்கு 2ஆம் இடம்! முதல்வன் திட்டத்தின் வெற்றி!
யுபிஎஸ்சி தேர்வில் மதுரை மாணவி சாதனை: தமிழ்நாட்டின் ராஜேஸ்வரிக்கு 2ஆம் இடம்! முதல்வன் திட்டத்தின் வெற்றி!
Chief Minister Stalin 14 announcements : 7 லட்சம் வீடுகள், வீட்டு மனைப்பட்டா, மருத்துவ காப்பீடு.! அசத்தலான 14 அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின்
7 லட்சம் புதிய வீடுகள், வீட்டு மனைப்பட்டா, மருத்துவ காப்பீடு.! அசத்தலான 14 அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின்
US India Russia Crude Oil: “உங்களுக்கு 30 நாள் டைம்“; இந்தியாவிற்கு உத்தரவிட்ட ட்ரம்ப் அரசு.! எதுக்காகன்னு தெரியுமா.?
“உங்களுக்கு 30 நாள் டைம்“; இந்தியாவிற்கு உத்தரவிட்ட ட்ரம்ப் அரசு.! எதுக்காகன்னு தெரியுமா.?
GOLD AND SILVER RATE TODAY : 15 ஆயிரத்திற்கு கீழ் வந்த தங்கம் விலை.! குஷியில் துள்ளி குதிக்கும் நகைப்பிரியர்கள்
15 ஆயிரத்திற்கு கீழ் வந்த தங்கம் விலை.! குஷியில் துள்ளி குதிக்கும் நகைப்பிரியர்கள்
Top 10 News Headlines: தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, இந்தியாவிற்கு அமெரிக்கா அனுமதி, ஈரான் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, இந்தியாவிற்கு அமெரிக்கா அனுமதி, ஈரான் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
Ration Shop Employees Salary : ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்... எவ்வளவு தெரியுமா.? அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்... எவ்வளவு தெரியுமா.? அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
Trump Vs Mojtaba Khamenei: ட்ரம்ப்பே, அத சொல்ல நீங்க யாரு.?; ஈரான் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா பத்தி இப்படி சொல்லிட்டாரே.!
ட்ரம்ப்பே, அத சொல்ல நீங்க யாரு.?; ஈரான் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா பத்தி இப்படி சொல்லிட்டாரே.!
Mahindra BE.07 Vs BE6: பிரமாண்டத்துக்கு மேல பிரமாண்டம்; மஹிந்திராவின் புதிய BE.07 எப்போ அறிமுகம்.? அதிக இடம், ரேஞ்ச் தருமா.?
பிரமாண்டத்துக்கு மேல பிரமாண்டம்; மஹிந்திராவின் புதிய BE.07 எப்போ அறிமுகம்.? அதிக இடம், ரேஞ்ச் தருமா.?
Embed widget