மேலும் அறிய

தஞ்சை மாநகராட்சியில் ஓராண்டிற்குள் அனைத்து தார்சாலை பணிகளும் நிறைவடையும் - மேயர் சண்.ராமநாதன் தகவல்

இந்த பணிகள் அனைத்தும் ஒரு மாத்திற்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

தஞ்சாவூர்: தஞ்சை மாநகராட்சியில் அனைத்து தார்சாலை பணிகளும் ஒரு ஆண்டுக்குள் நிறைவடையும். தற்போது ரூ.40 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக இருந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோரிடம் எடுத்துக்கூறி நிதி பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தெரிவித்தார்.

தஞ்சை மாநகராட்சி பகுதியில் பல்வேறு திட்டத்தின் கீழ் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தார்சாலை சீரமைப்பு, புதிதாக சாலை அமைப்பது, மண்சாலைகளை தார்சாலைகளாக மாற்றுதல், பேவர் பிளாக் சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் 2023-24-ம் ஆண்டு மாநில நிதிக்குழு திட்டத்தின் கீழ் 4.430 கி.மீ. நீளத்துக்கு மண்சாலைகள் தார்சாலைகளாக மாறற்றப்படுகின்றன. ரூ.3 கோடியே 19 லட்சம் செலவில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த சாலை பணிகளை மேற்கொள்வது தொடர்பாக பூமி பூஜை தஞ்சை நடராஜபுரம் 3-வது தெருவில் நடைபெற்றது.

விழாவில் மேயர் சண்.ராமநாதன் கலந்து கொண்டு, சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி பொறியாளர் ரமேஷ், திலீப் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர். அதன்படி நடராஜபுரம் 3-வது தெருவில் மட்டும் 1.420 கி.மீ. தூரம் 1 கோடியே 3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பொக்லின் எந்திரம் மூலம் சாலையை தோண்டும் பணி நடைபெற்றது.

பின்னர் மேயர் சண்.ராமநாதன் நிருபர்களிடம் கூறுகையில், தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளிலும் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.40 கோடி மதிப்பில் இந்த பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக சாலைகள் இருந்ததை கருத்தில் கொண்டு இதனை சீரமைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோரிடம் எடுத்துக்கூறி நிதி பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் சாலை பணிகளுக்கு நிதி கோரப்பட்டு உள்ளது.

அந்த நிதியும் பெறப்பட்டவுடன் அனைத்து சாலைகளும் தார்சாலைகளாக மாற்றப்படும். இந்த பணிகள் அனைத்தும் ஒரு ஆண்டுக்குள் நிறைவடையும். மேலும் மாநில நிதிக்குழு திட்டத்தின் கீழ் சாலை மேம்பாட்டு பணிகள் தமிழ்நகர் 3-ம் தெரு, தேவாநகர், அர்ஜூன் நகர், அனில்நகர் உள்ளிட்ட 14 இடங்களில் மண்சாலைகள் சாலைகள் தார்சாலைகளாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் பல இடங்களில் தெருக்கள் அமைக்கப்பட்டது முதல் தார்சாலை போடல் மண்சாலையாக உள்ள சாலைகள் தார்சாலைகளாக மாற்றப்படுகின்றன. இந்த பணிகள் அனைத்தும் ஒரு மாத்திற்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kanguva:
Kanguva: "கங்குவா படத்தின் முதல் அரைமணி நேரம் சுமார்தான்.. ஆனால்" சூர்யா மனைவி ஜோதிகா ஆதங்கம்
தூள் கிளப்பும் டிஎன்பிஎஸ்சி; குரூப் 1, 1ஏ, குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இதுதான் விஷயம்!
தூள் கிளப்பும் டிஎன்பிஎஸ்சி; குரூப் 1, 1ஏ, குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இதுதான் விஷயம்!
TN UYEGP Scheme: இளைஞர்களுக்கான ஜாக்பாட்..! ரூ.15 லட்சம் வரை கடன், ரூ.3.75 லட்சம் மானியம் - வாரிக் கொடுக்கும் தமிழக அரசு
TN UYEGP Scheme: இளைஞர்களுக்கான ஜாக்பாட்..! ரூ.15 லட்சம் வரை கடன், ரூ.3.75 லட்சம் மானியம் - வாரிக் கொடுக்கும் தமிழக அரசு
Tamilnadu RoundUp: விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு தீவிர எதிர்ப்பு, மதுரையில் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu RoundUp: விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு தீவிர எதிர்ப்பு, மதுரையில் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanguva:
Kanguva: "கங்குவா படத்தின் முதல் அரைமணி நேரம் சுமார்தான்.. ஆனால்" சூர்யா மனைவி ஜோதிகா ஆதங்கம்
தூள் கிளப்பும் டிஎன்பிஎஸ்சி; குரூப் 1, 1ஏ, குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இதுதான் விஷயம்!
தூள் கிளப்பும் டிஎன்பிஎஸ்சி; குரூப் 1, 1ஏ, குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இதுதான் விஷயம்!
TN UYEGP Scheme: இளைஞர்களுக்கான ஜாக்பாட்..! ரூ.15 லட்சம் வரை கடன், ரூ.3.75 லட்சம் மானியம் - வாரிக் கொடுக்கும் தமிழக அரசு
TN UYEGP Scheme: இளைஞர்களுக்கான ஜாக்பாட்..! ரூ.15 லட்சம் வரை கடன், ரூ.3.75 லட்சம் மானியம் - வாரிக் கொடுக்கும் தமிழக அரசு
Tamilnadu RoundUp: விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு தீவிர எதிர்ப்பு, மதுரையில் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu RoundUp: விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு தீவிர எதிர்ப்பு, மதுரையில் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
உக்கிரமடையும் போராட்டம்! தண்ணீர் தொட்டி மேல் மண்ணெண்ணெய் கேன்களுடன் மக்கள் - மதுரையில் நடப்பது என்ன?
உக்கிரமடையும் போராட்டம்! தண்ணீர் தொட்டி மேல் மண்ணெண்ணெய் கேன்களுடன் மக்கள் - மதுரையில் நடப்பது என்ன?
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
Embed widget