மேலும் அறிய
Advertisement
நாகப்பட்டினத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை
வேலை கிடைக்காத சோகத்தில் இளைஞர் மருந்து குடித்து இறந்தது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
நாகை மாவட்டம் திருமருகல் கீழத் தெருவை சேர்ந்தவர் சிவசண்முகம் மகன் மகேஸ்வரன் (35). இவர் முதுநிலை மருந்தாளுநர் படித்துள்ளார். படித்து முடித்து இதுவரை வேலை கிடைக்காததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 14-ஆம் தேதி மகேஸ்வரனின் பெற்றோர் ஆண்டிபந்தலில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் மகேஸ்வரன் வீட்டில் இருந்த களைக்கொல்லி பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த மகேஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடி திருமருகலில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். மீண்டும் 15 ஆம் தேதி காலையில் மகேஸ்வரனுக்கு வயிற்று வலி அதிகமாகி உள்ளது. இதனால் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை மகேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த திட்டச்சேரி போலீசார் மகேஸ்வரனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி உள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலை கிடைக்காத சோகத்தில் இளைஞர் மருந்து குடித்து இறந்தது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
வேளாங்கண்ணியில் ஈஸ்டர் பண்டிகையினை யொட்டி சிறப்பு பிரார்த்தனை
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி உலக பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் புனிதப்பயணிகளாகவும், சுற்றுலாவாகவும் வந்து செல்கிறார்கள். புனித வெள்ளியன்று சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்து 3-ம் நாள் உயிர்தெழுந்த தினம் ஈஸ்டர் பண்டிகையாக உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவர்களின் புண்ணியத்தலமாக விளங்கும் வேளாங்கண்ணியில் இன்று அதிகாலை ஈஸ்டர் பண்டிகையினையொட்டி சிறப்பு பிரார்தனை நடைபெற்றது .
இதற்காக பேராலயத்தின் கலை அரங்கில் நேற்று இரவு 11 மணி முதல் பாஸ்கா திருவிழிப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் மெழுகு வர்த்திகளை கையில் ஏந்தியபடி அனைவரும் சமாதானமாக இருக்கவும், வன்முறை முற்றிலுமாக ஒழிந்திட வேண்டும், நடைபெற்றுவரும் ரஷ்யா உக்ரைன் போர் முடிவுக்கு வேண்டியும் பிரார்தனை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரையில் ஈஸ்டர் சிறப்பு பிரார்தனை நடைபெற்றது.இதில் இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த நிகழ்வுகள் தத்ருபமாக வடிவமைக்கப்பட்டு நடத்தி காட்டப்பட்டது.
தொடர்ந்து உயிர்தெழுந்த இயேசு வருகிற காட்சியின்போது வாணவேடிக்கைகளும் நடைபெற்றது. தொடர்ந்து திவ்ய நற்கருணை ஆராதனையும் நிறைவேற்றப்பட்டது. இதில் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் திவ்ய நற்கருணை ஆசிர் வர்ங்கப்பட்டது. இந்த சிறப்பு பிராத்தனையில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த பல்லயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஈஸ்டர் பண்டிகையினை யொட்டி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் வேளாங்கண்ணி பேராலயத்தில்தமிழ், மலையாளம், கொங்கனி, தெலுங்கு, ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சிறப்பு பிரார்தனை நடைபெறுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திருச்சி
தேர்தல் 2024
பொழுதுபோக்கு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion