மேலும் அறிய

கையில் பட்டாக்கத்தியுடன் வந்த ரவுடி... துணிச்சலுடன் தடுத்து நிறுத்திய தஞ்சாவூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்

பட்டாக்கத்தியுடன் மோதிக் கொண்டதை பார்த்து சற்று யோசிக்காமலும், தனது ஓய்வு நேரத்திலும் கூட மிகுந்த தைரியம். விழிப்புணர்வுடன் துரிதமாக செயல்பட்டு பட்டாக்கத்தி பறித்தார்.

தஞ்சாவூா்: பட்டாக்கத்தியுடன் தாக்குதலில் ஈடுபட்ட வாலிபரிடம் இருந்து அதனை துணிச்சலுடன் செயல்பட்டு பறித்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு மாவட்ட எஸ்.பி., சுந்தரவதனம் பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினார். 

தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் அருகே கீழராஜவீதியில், எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் 2 வாலிபர்கள் மது போதையில் பட்டாக்கத்தியுடன் மோதிக்கொண்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென தாக்கிக் கொள்ள முயன்றனர். போக்குவரத்து அதிகம் உள்ள பகுதி என்பதால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அச்சமடைந்தனர்.


கையில் பட்டாக்கத்தியுடன் வந்த ரவுடி... துணிச்சலுடன் தடுத்து நிறுத்திய தஞ்சாவூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்

அப்போது மேற்கு காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் சம்மந்தம் தனது பணி முடிந்து வந்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் சாலையில் இரு வாலிபர்களும் பட்டாக்கத்தியுடன் மோதிக் கொண்டதை பார்த்து சற்று யோசிக்காமலும், தனது ஓய்வு நேரத்திலும் கூட மிகுந்த தைரியம் மற்றும் விழிப்புணர்வுடன் துரிதமாக செயல்பட்டு பட்டாக்கத்தி வைத்திருந்த வாலிபரை தடுத்து நிறுத்தி பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் செயல்பட்டு போதையில் இருந்த அந்த வாலிபரிடம் இருந்து பட்டாக்கத்தியை பறிமுதல் செய்தார்.

தகவலறிந்து விரைந்த வந்த கிழக்கு போலீசார் பட்டாக்கத்தி வைத்திருந்த வாலிபரை பிடித்து  விசாரணைக்காக தஞ்சாவூர் கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். போலீசார் விசாரணையில், இரு வாலிபர்களும் ஒரே பெண்ணிடம் பழகி வந்துள்ளனர். இந்த தகவல் இருவருக்கும் தெரியாமல் இருந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பெண் கூறியதால், வாலிபர் ஒருவர் மற்றொருவரை கொலை செய்துவிடுவதாக கூறி பட்டாக் கத்தியுடன் போதையில் தாக்கி கொள்ள முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வாலிபரை பிடித்து விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் வெகு துரிதமாகவும், சமயோஜிதமாகவும் செயல்பட்டு பட்டாக்கத்தியை பறித்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சம்மந்தத்திற்கு பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினர் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்தன. அவரது கடமைப்பற்று, தன்னலமற்ற சேவை மனப்பான்மை மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் உறுதியான செயல்பாடு மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சம்மந்தத்தின் இந்த சிறப்பான பணியை பாராட்டும் விதமாக, மாவட்ட எஸ்.பி., ஏ.சுந்தரவதனம் பாராட்டுகள் தெரிவித்து சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

தலைப்பு செய்திகள்

நடுவழியில் அதிகரித்த பிரசவ வலி...  தஞ்சாவூர் அருகே 108 ஆம்புலன்சிலேயே குவா...குவா!!!
நடுவழியில் அதிகரித்த பிரசவ வலி...  தஞ்சாவூர் அருகே 108 ஆம்புலன்சிலேயே குவா...குவா!!!
சர்வர் கோளாறு... ரேஷன் கடை எந்திரங்களை ஒப்படைத்து பணியாளர்கள் போராட்டம்: கும்பகோணத்தில் பெரும் பரபரப்பு
சர்வர் கோளாறு... ரேஷன் கடை எந்திரங்களை ஒப்படைத்து பணியாளர்கள் போராட்டம்: கும்பகோணத்தில் பெரும் பரபரப்பு
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
விபத்து நடக்கும் முன் விழித்துக் கொள்ளுங்கள்! தஞ்சையில் ஆபத்தான மேன்ஹோல்களை சீரமைக்க வலியுறுத்தல்
விபத்து நடக்கும் முன் விழித்துக் கொள்ளுங்கள்! தஞ்சையில் ஆபத்தான மேன்ஹோல்களை சீரமைக்க வலியுறுத்தல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Free Health Insurance: அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Gold and silver rate today : இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
Embed widget