மேலும் அறிய

தஞ்சை மாவட்டத்தில் ரூ. 1.74 லட்சம் ஏமாந்த விவசாயி மற்றும் ஆசிரியர்.. என்ன நடந்தது?

இதுபோன்ற மோசடிகள் மற்றும் ஓடிபி மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக உங்கள் வங்கி கண்ககிலிருந்து பணம் எடுக்கப்பட்டு இருந்தால் பதட்டப்படாமல் சைபர் கிரைம் போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும்.

தஞ்சை மாவட்டத்தில் ரூ. 1.74 லட்சம் ஏமாந்த விவசாயி மற்றும் ஆசிரியர்

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சூரியனார் கோவில் பகுதியை சேர்ந்த சுந்தரேசன் என்பவரின் மகன் சங்கர் (38), விவசாயி. இவருக்கு வெளிநாட்டில் வேலை இருப்பதாக தெரிவித்து இவரது இணையதள முகவரிக்கு ஒரு இ-மெயில் வந்துள்ளது. பின்னர் சங்கர், அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணில் சங்கர் தொடர்பு கொண்டுள்ளார்.

தொடர்ந்து அந்த செல்போனில் பேசிய நபர் ரெஜிஸ்டரேஷன் கட்டணம், இன்டர்வியூ மற்றும் விசா கட்டணங்கள் என்று பணம் செலுத்த கூறியுள்ளார். இதனை நம்பிய சங்கர், விவசாயம் செய்து சேமித்து வைத்திரந்த பணத்தை நான்கு தவணையாக மொத்தம் ரூ 1.08 லட்சத்தை அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.

பின்னர் தனக்கு விசா காப்பியை அனுப்ப கேட்டு சங்கர் போன் செய்தபோது அந்த மர்ம நபர் இன்னும் பணம் செலுத்த வேண்டும். அப்பொழுது தான் விசா காப்பி தர முடியும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து சங்கர் மீண்டும் , மீண்டும் அந்த செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவருக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சங்கர் இது குறித்து தஞ்சை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து சங்கர் அனுப்பிய வங்கி கணக்கை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.இதே போல், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் உமாமகேஸ்வரபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரிட்டோ (39). அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார்.

தஞ்சை மாவட்டத்தில் ரூ. 1.74 லட்சம் ஏமாந்த விவசாயி மற்றும் ஆசிரியர்.. என்ன நடந்தது?

அந்த மர்ம நபர்  பிரிட்டோ பயன்படுத்தும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிரெடிட் கார்ட் பிரிவின் மேனேஜர் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டுள்ளார். பின்னர் உங்களது செல்போன் எண்ணிற்கு ஓடிபி எண் ஒன்று வரும் அதைத் தெரிவித்தால் உங்களது கிரெடிட் கார்டின் தொகை உயர்த்த நடவடிக்கை எடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதை நம்பிய பிரிட்டோ தனது செல்போனுக்கு வந்த ஓடிபி எண்ணை அந்த மர்மநபர் இடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பிரிட்டோவின் கிரெடிட் கார்டில் இருந்து ரூ 73 ஆயிரத்து 770 ரூபாய் மோசடியாக எடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரிட்டோ தஞ்சை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில்,தற்போதைய காலக்கட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகிறது. வங்கியிலிருந்து மேனேஜர் பேசுகிறோம் அல்லது வங்கி ஊழியர் பேசுவதாக கூறி தங்களின் வங்கி  கணக்கு விபரம், ஏடிஎம் கார்டு விபரம், ரகசிய எண் போன்றவற்றையும் ஓடிபி எண் ஆகியவற்றையும் கேட்டால் கண்டிப்பாக தெரிவிக்க கூடாது. உங்கள் இடத்தின் மொபைல் டவர் அமைக்க உள்ளோம். பல லட்சம்  அட்வான்ஸ், மாதாமாதம் பல ஆயிரம் வாடகை தருகிறோம் என்று கூறி ஆவணங்களை அனுப்புங்கள், பணம் அனுப்புங்கள் என்று தெரிவித்தால் அதற்கு கண்டிப்பாக பதில் அளிக்கவோ, பணம் அனுப்பவோ கூடாது.

தஞ்சை மாவட்டத்தில் ரூ. 1.74 லட்சம் ஏமாந்த விவசாயி மற்றும் ஆசிரியர்.. என்ன நடந்தது?

இதேபோல் உங்களுக்கு அறிமுகமான நபர்களின் போலி பேஸ்புக் கணக்கை தொடங்கி அதன் வாயிலாக அவசர தேவை பணம் அனுப்பும்படி கேட்கும் சம்பவங்கள் நடக்கிறது. அவ்வாறு கேட்டால் பணம் அனுப்பக்கூடாது.பிரபலமான நிறுவனங்களின் பெயரில் போலியான வேலை வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்து வரும் எஸ்எம்எஸ், இ-மெயில், ஆன்லைன் வேலை வெப்சைட் வாயிலாக விளம்பரங்களை அனுப்பி ஏமாற்றக்கூடும். அவர்கள் ஏதேனும் காரணம் கூறி பணம் கட்டச் கூறினால் ஏமாந்து விடக்கூடாது.

தஞ்சை மாவட்டத்தில் ரூ. 1.74 லட்சம் ஏமாந்த விவசாயி மற்றும் ஆசிரியர்.. என்ன நடந்தது?

இதேபோல் பைக்குகள், கார்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை குறைந்த விலைக்கு விற்பதாக கூறி வரும் விளம்பரங்களை நம்பி ஏமாந்து விடக்கூடாது. பணம் அல்லது விலை உயர்ந்து பொருட்கள் பரிசாக கிடைத்துள்ளது. இதுபோன்று மோசடி செய்து பணம் பறிக்கும் கும்பலிடம் சிக்காமல் உஷாராக இருக்க வேண்டும். உங்களுடைய சுய விபரங்களை  அப்டேட் செய்ய வேண்டும் என வரும் போலியான மெசேஜ்களில் உள்ள லிங்கிற்கு சென்றால் பணம் இழப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது. உங்கள் முதலீட்டிற்கு, தினந்தோறும் அதிக வட்டி தருவதாக போலியான  நிறுவனங்கள் பெயரில் வரும் மெசேஜ்களை நம்பி உங்கள் பணத்தை முதலீடு செய்து ஏமாந்து விடாதீர்கள்.  

இதுபோன்ற மோசடிகள் மற்றும் ஓடிபி மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக உங்கள் வங்கி கண்ககிலிருந்து பணம் எடுக்கப்பட்டு இருந்தால் பதட்டப்படாமல் சைபர் கிரைம் போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும். சைபர் கிரைம் போலீசாரை தொடர்பு கொள்ள முன்பு 155260 என்ற தொலைபேசி எண் செயல்பாட்டில் இருந்தது. தற்போது இந்த எண்ணிற்கு பதிலாக 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் என்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

School Colleges Leave: மாணவர்களே ஜாலியா ரெஸ்ட் எடுங்க,! நாளை 9 மாவட்ட பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: மாணவர்களே ஜாலியா ரெஸ்ட் எடுங்க,!நாளை 9 மாவட்டங்களின் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை.!
எமகண்டம் தொடங்கியாச்சு! ஃபெஞ்சல் புயலுக்கு தயாரான சென்னை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?
எமகண்டம் தொடங்கியாச்சு! ஃபெஞ்சல் புயலுக்கு தயாரான சென்னை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?
Fengal Cyclone LIVE: சென்னையில் புயல் கரையை கடக்கும்போது பொதுப்போக்குவரத்து நிறுத்தம்
Fengal Cyclone LIVE: சென்னையில் புயல் கரையை கடக்கும்போது பொதுப்போக்குவரத்து நிறுத்தம்
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோBus Accident : எமன் ஆன U TURN..! நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் பதறவைக்கும் CCTV காட்சிகள்Keerthi Suresh Marriage : ’’இன்னும் ஒரு மாசம் தான்..கோவா-ல கல்யாணம் !’’வெட்கப்பட்ட கீர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Colleges Leave: மாணவர்களே ஜாலியா ரெஸ்ட் எடுங்க,! நாளை 9 மாவட்ட பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: மாணவர்களே ஜாலியா ரெஸ்ட் எடுங்க,!நாளை 9 மாவட்டங்களின் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை.!
எமகண்டம் தொடங்கியாச்சு! ஃபெஞ்சல் புயலுக்கு தயாரான சென்னை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?
எமகண்டம் தொடங்கியாச்சு! ஃபெஞ்சல் புயலுக்கு தயாரான சென்னை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?
Fengal Cyclone LIVE: சென்னையில் புயல் கரையை கடக்கும்போது பொதுப்போக்குவரத்து நிறுத்தம்
Fengal Cyclone LIVE: சென்னையில் புயல் கரையை கடக்கும்போது பொதுப்போக்குவரத்து நிறுத்தம்
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Samantha Father Death: நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் உயிரிழப்பு; மகளின் உருக்கமான போஸ்ட் - ரசிகர்கள் ஆறுதல்!
Samantha Father Death: நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் உயிரிழப்பு; மகளின் உருக்கமான போஸ்ட் - ரசிகர்கள் ஆறுதல்!
President Murmu: நெருங்கும் ஃபெஞ்சல் புயல்.! குடியரசுத் தலைவரின் திருவாரூர் பல்கலைக்கழக பயணம் ரத்து.!
President Murmu: நெருங்கும் ஃபெஞ்சல் புயல்.! குடியரசுத் தலைவரின் திருவாரூர் பல்கலைக்கழக பயணம் ரத்து.!
அதானி மின்சாரத்திற்கு அதிக விலை ஏன்? சிக்கலில் சிக்கிய தமிழக மின்துறை ; அன்புமணி கூறுவது என்ன ?
அதானி மின்சாரத்திற்கு அதிக விலை ஏன்? சிக்கலில் சிக்கிய தமிழக மின்துறை ; அன்புமணி கூறுவது என்ன ?
ஏடிஎம்-ல் விட்டுச்சென்ற ரூ. 47 ஆயிரம் பணம் - அடுத்து நடந்தது என்ன?
ஏடிஎம்-ல் விட்டுச்சென்ற ரூ. 47 ஆயிரம் பணம் - அடுத்து நடந்தது என்ன?
Embed widget