மேலும் அறிய

திருவையாற்றில் சிலிண்டர் வெடித்து 12 குடிசை வீடுகள் நாசம்

12 வீடுகளில் தீபற்றி எரிந்ததால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது, இதில் 8 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த மேலத்திருப்பூந்துருத்தி, புதுத்தெருவை சேர்ந்த கூத்தையன் மகன் தா்மராஜ் (54). இவர் வீட்டில் பூக்கட்டும் நாரை விற்பனை செய்வதற்காக அடுக்கி வைத்திருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நாரில் தீப்பற்றியது. அப்போது பலத்த காற்று அடித்ததால், தீ மளமள என அருகிலுள்ள பகுதிக்கு பரவியது. இதனால் அப்பகுதிக்கு அருகில் இருந்த கா்ணன் (50) வீட்டில் பற்றியது. வீடு முழுவதும் தீ பரவி வீட்டிற்குள் இருந்த கேஸ் சிலிண்டர் திடிரென வெடித்தது. இதனால் தீ வேகமாக பரவியதால், அப்பகுதியில் குடிசை வீட்டில் வசித்தும் வருபவர்களான அஞ்சலை, ராஜேஸ்வரி, முருகேசன், பூபதி, சைவராஜ், கல்யாணி, முருகேசன், மலா்கொடி, கீழத்திருப்பூந்துருத்தியை சோ்ந்த தனலெட்சுமி, சாந்தி ஆகிய 12 பேரின் வீடுகள் முழுவதும் எரிந்து நாசமானது. இதனால் 12 வீட்டிற்குள் இருந்த பேன், மிக்ஸி, கிரைண்டர், பிரோ, கட்டில் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து கருகியது.

திருவையாற்றில் சிலிண்டர் வெடித்து 12 குடிசை வீடுகள் நாசம்

12 வீடுகளில் தீபற்றி எரிந்ததால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இது குறித்து தகவலறிந்த நடுக்காவேரி போலீசார், தீயணைப்பு துறையினருக்கும், மின்சார துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அங்குள்ள வீடுகளில் தீ பரவியதையடுத்து 4 தீயணைப்பு வாகனங்களில், 50 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் குடிசை வீட்டில் உள்ளவர்கள் விவசாய வேலைக்கு சென்றதால், பூபதி என்பவருத்து லேசான தீக்காயம் ஏற்பட்டது. ஆனால் அதிஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. தீயினால், மின்கம்பிகள் முழுவதும் எரிந்ததால், உடனடியாக மின்சாரத்துறையினர் மின்சாரத்தை துண்டித்தனர். பெரும் தீவிபத்தை அறிந்த பொது மக்கள், விவசாயிகள் திரண்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் 8 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

திருவையாற்றில் சிலிண்டர் வெடித்து 12 குடிசை வீடுகள் நாசம்

இது குறித்து தகவலறிந்த தஞ்சை சப் கலெக்டா் வேலுமணி, தாசில்தார் நெடுஞ்செழியன், ஒன்றியக்குழுத் தலைவா் அரசாபகரன், ஒன்றியச் செயலாளார் கௌதமன், பேரூராட்சி செயல் அலுவலா் செந்தில்குமார், நகரச்செயலாளா் அகமதுமைதீன் ஆகியோர்  சம்பவ இடத்தை பார்வையிட்டு தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களுக்கும் தலா 5 ஆயிரம் பணம், வேட்டி, புடவை, அரிசி, மண்ணெண்ணை ஆகியவற்றை வழங்கி ஆறுதல் கூறினார்கள். தீ விபத்து குறித்து நடுக்காவேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் விசாரித்து வருகின்றார்.

தலைப்பு செய்திகள்

தெருவிளக்குகள் எரியலை... விஷபூச்சிகள் அச்சத்தால் தவிக்கும் சிவகாமிபுரம் மக்கள்
தெருவிளக்குகள் எரியலை... விஷபூச்சிகள் அச்சத்தால் தவிக்கும் சிவகாமிபுரம் மக்கள்
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget