மீன்பிடி ஒழுங்கு முறை சட்டங்களை முழுமையாக அமல்படுத்த கோரி 8 மாவட்ட மீனவர்கள் உண்ணாவிரதம் அறிவிப்பு
அரசால் தடை செய்யப்பட்ட ஸ்பீடு என்ஜினை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவ கிராமங்கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை எனில் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்ட போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு கடல்மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-இன் படி தமிழக கடற்கரை பகுதியில் கடலில் மீன்வளத்தை வளம் குன்றா வகையில் பேணிகாத்திடவும், கடலின் அடிப்பகுதியில் உள்ள இயற்கை சூழ்நிலைத்தன்மையை பாதுகாத்திடவும், மீன் வளர்ப்பினை அதிகரிக்கும் பொருட்டும் மற்றும் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்திடவும், தமிழக அரசால் கடலில் இரட்டை மடி மற்றும் சுருக்குமடி வலைகள் அதிவேக எஞ்சின் பெருத்திய படகுகள் கொண்டு மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குமடி பயன்படுத்தும் மீனவர்களுக்கும் அதனை எதிர்க்கும் மீனவர்களுக்கும் இடையே நீண்டகாலமாக பிரச்சனைகள் இருந்து வருகிறது. இப்பிரச்சனை
இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா மற்றும் தரங்கம்பாடி தாலுக்காகளை சேர்ந்த திருமுல்லைவாசல், பூம்புகார், பழையார், சந்திரபாடி உள்ளிட்ட இடங்களில் மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும், அதனை மறுக்கும் பட்சத்தில் 1983 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தில் உள்ள 21 சட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பிரச்சினை சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. நாகப்பட்டினம், காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு அறிவுறுத்தலின்படி விசைப் படகுகளில் இருந்து ஸ்பீடு இன்ஜினை முற்றிலும் இறக்கிவிட்ட நிலையில், அரசால் தடைசெய்யப்பட்ட ஸ்பீட் இன்ஜினை பயன்படுத்தி தொழில் செய்யும் பழையார், திருமுல்லைவாசல், பூம்புகார், சந்திரபாடி ஆகிய கிராமங்களில் உள்ள விசைப்படகுகளில் ஸ்பீடு என்ஜினை வருகிற 24 ஆம் தேதிக்குள் முற்றிலுமாக அகற்ற வலியுறுத்தி நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டகளை சேர்ந்த 64 கிராமங்களின் தலைமை கிராமமான அக்கரைப்பேட்டை மீனவ கிராமம் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளனர்.
அவ்வாறு, அகற்றப்படாத பட்சத்தில் வருகிற 27ஆம் தேதி 8 மாவட்ட மீனவர்கள் ஒருங்கிணைந்து, அந்தந்த மாவட்டங்களில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 7ஆம் தேதி நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை அவர்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் லலிதாவிடம் வழங்கி தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்றனர்.
TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை - வானிலை ஆய்வு மையம்