மேலும் அறிய
Advertisement
திருவாரூரில் 7280 ஹெக்டேர் விளைநிலங்கள் நீரில் மூழ்கின - மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பேட்டி
’’வருவாய்த்துறை அதிகாரிகள் கிராமங்கள் தோறும் சென்று பயிர் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்து அங்கு விவசாயிகளுக்கு தேவையான உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு’’
திருவாரூர் மாவட்டத்தில் 212 பகுதிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. அதில் ஒரு இடம் மட்டும் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மக்களை தங்க வைப்பதற்கு 249 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன மேலும் 14 கால்நடை பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. திருவாரூர் மாவட்டம் முழுவதும் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு துணை ஆட்சியர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. முதல்நிலை மீட்புக்குழுவினர் என 3000 பேர் தயார் நிலையில் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தி`ன் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை குறித்த புகார்கள் தெரிவிக்க தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தலின் படி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து தகவல்கள் உடனுக்குடன் மீனவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. 600க்கும் மேற்பட்ட பெரிய பாலங்கள் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய பாலங்கள் அனைத்தையும் சுத்தம் செய்து வைத்துள்ளோம். பொதுப்பணித் துறை மூலமாக ஏ சேனல் பி சேனல் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு உள்ளன.
இது மட்டுமன்றி நூறு நாள் வேலைத்திட்ட ஊழியர்களை பயன்படுத்தி சி சேனல் மற்றும் டி சேனல் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு உள்ளன. அதுமட்டுமன்றி மெகா தூர்வாரும் பணி தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்பட்டது இதில் நகராட்சி பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள சிறு குறு வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு உள்ளன. இது போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்டுள்ளன. திருவாரூரில் பேரிடர் மேலாண்மை பிரிவு சார்பில் 212 இடங்கள் தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டு அந்தப் பகுதிகளில் இருக்கிற மக்களை தங்க வைப்பதற்காக 249 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்களை தங்க வைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் தனியார் திருமண மண்டபங்கள் என பாதிக்க கூடிய மக்களை தங்க வைப்பதற்கு இடங்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த இடங்கள் அனைத்தையும் மண்டல அளவிலான கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்து அங்கு பொது மக்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை, மின்சாரம், ஜெனரேட்டர் உள்ளிட்ட வசதிகளை தயார் நிலையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தற்பொழுது சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. வேளாண் துறை வருவாய் துறை பொதுப்பணித்துறை ஆகிய ஊழியர்களை கொண்டு கிராமங்கள் வாரியாக சிறு சிறு குழுக்களாக அமைத்து பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் மூலம் விளை நிலத்தில் மழைநீர் தேங்கி இருந்தால் அதனை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும். மேலும் ஜேசிபி இயந்திரம் உள்ளிட்ட இயந்திரங்களை தயார் நிலையில் வைத்து கொள்ள இந்த குழு நடவடிக்கை எடுக்கும், கடந்த 2 தினங்களுக்கு முன்பு வரை திருவாரூர் மாவட்டத்தில் 7280 ஹெக்டேர் மழைநீர் விளைநிலங்களில் தேங்கி இருந்தது. தற்பொழுது மழை தொடர்ந்து பெய்து வருவதால் மீண்டும் ஆய்வு என்பது நடத்தப்படும். வேளாண் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கிராமங்கள் தோறும் சென்று பயிர் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்து அங்கு விவசாயிகளுக்கு தேவையான உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion