மேலும் அறிய

கிடங்குகள் நோக்கி நகர்ந்த 27 லட்சம் சாக்குகள்… தஞ்சையில் லாரிகள் பரபரப்பாக இயங்கிய தருணம்!

கொல்கத்தாவில் இருந்து சரக்கு ரயிலின் 42 வேகன்களில் 5460 பேரல் சாக்குகள்  தஞ்சைக்கு வந்தது. ஒரு பேரல் என்பது 500 சாக்குகள் ஆகும். அதன்படி 27,30,000 சாக்குகள்  தஞ்சை வந்தது.

தஞ்சாவூர்: கொல்கத்தாவிலிருந்து தஞ்சைக்கு சரக்கு ரெயிலில் வந்த 27.30 லட்சம் சாக்குகள் வந்து சேர்ந்தன. இவை அனைத்தும் நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளுக்கு லாரிகள் அனுப்பி வைக்கப்பட்டது. குறுவை சாகுபடிக்காக முன்னேற்பாடு பணிகளில் வேளாண்துறை வெகுவாக மும்முரம் காட்டி வருகிறது. 

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக  தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும். ஒரு சில பகுதிகளில் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. நெல் அறுவடை முடிந்த பின்னர் உளுந்து, பயறு போன்றவற்றையும் விவசாயிகள் சாகுபடி செய்வது வழக்கம். 

பம்ப் செட் வசதியுள்ள சில பகுதிகளில் விவசாயிகள் கோடை நெல் சாகுபடியும் மேற்கொள்வர். குறுவை, சம்பா, தாளடி என்று முப்போகமும், கோடை நெல்லும்தான் தஞ்சையின் முக்கிய சாகுபடி பயிராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல் சாகுபடியைதான் விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் பம்ப்செட் மூலம் கோடை நெல் சாகுபடியை மேற்கொண்டுள்ளனர். வரும் ஜூன் மாதம் மேட்டூர் அணை வழக்கம் போல் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் குறுவை சாகுபடிக்கான பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். தற்போது தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்த மழை விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தற்போது தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் அறுவடை பணிகளும் தொடங்கியுள்ளன. இந்நிலையில் அறுவடை செய்யப்படும் நெல்லுக்கு சாக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சாக்குகள் வரவழைக்க முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி கொல்கத்தாவில் இருந்து சரக்கு ரயிலின் 42 வேகன்களில் 5460 பேரல் சாக்குகள்  தஞ்சைக்கு வந்தது. ஒரு பேரல் என்பது 500 சாக்குகள் ஆகும். அதன்படி 27,30,000 சாக்குகள்  தஞ்சை வந்தது. இதையடுத்து ஏராளமான தொழிலாளர்கள் சரக்கு ரெயிலில் இருந்து சாக்குகளை லாரிகளில் ஏற்றினர். 

இந்த சாக்குகள் தஞ்சை மாவட்டம் அனைத்து தாலுகாவிலும் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு  அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget