மேலும் அறிய

திருவாரூரில் பணி நிரந்தரம் செய்யக் கோரிய 200 தூய்மை பணியாளர்கள் கைது

தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் அரசு அறிவித்த 5000 ரூபாய் சம்பளத் தொகையினை 2023 ஏப்ரல் மாதத்தில் இருந்து அரியர் தொகையோடு வழங்க வேண்டும்.

இரண்டு கிலோமீட்டர் தூரம் பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
 
நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் தூய்மை பணியை தனியார் மயமாக்கும் அவுட் சோர்சிங் முறையை தடுத்து நிறுத்த வேண்டும் அரசாணை எண் (2டி) 62 படி குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களை பணி நிரந்தரம் செய்து காலம் வரை ஊதியம் பணிக்கொடை சம்பள நிலுவை தொகைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் விளமல் கப்பாலம் பகுதியில் இருந்து பேரணியாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான வாயிலின் கேட்டுகளை மூடி தடுப்பு அரண்களை அமைத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழையாத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பேரணியாக வந்த தூய்மை பணியாளர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பியபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூரில் பணி நிரந்தரம் செய்யக் கோரிய  200 தூய்மை பணியாளர்கள் கைது
 
மேலும் இந்த போராட்டத்தில் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு அறிவித்த 5000 ரூபாய் சம்பளத் தொகையினை 2023 ஏப்ரல் மாதத்தில் இருந்து அரியர் தொகையோடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கண்டனம முழக்கங்களை எழுப்பினர். திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முருகையன் தலைமை வகித்தார். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்து இரண்டுக்கும் மேற்பட்ட பேருந்துகளில் ஏற்றி பவித்திரமாணிக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். 200 க்கு மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மேலும் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து பொதுமக்களை காவல்துறையினர் மாற்று  வழி மூலம் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai:
Annamalai: "பக்தர்கள் உயிரிழப்புக்கு சேகர்பாபுதான் பொறுப்பு" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
Fact Check: அரசுப்பள்ளி விழாவில் கட்டிப்பிடித்து நடனமாடும் மாணவ- மாணவி?- வைரல் வீடியோ- நடந்தது என்ன?
Fact Check: அரசுப்பள்ளி விழாவில் கட்டிப்பிடித்து நடனமாடும் மாணவ- மாணவி?- வைரல் வீடியோ- நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sunita williams Return | நேரலை செய்யும் NASA ஆளே மாறிப்போன சுனிதா மாணவர்கள் நெகிழ்ச்சி சம்பவம்Nagpur Violence | பற்றி எரியும் மகாராஷ்டிரா இந்துக்கள் இஸ்லாமியர்கள் மோதல் படத்தால் வந்த பஞ்சாயத்துADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!AR Rahman : ”முன்னாள் மனைவினு சொல்லாதீங்க” ஆடியோ வெளியிட்ட சாய்ராபானு! இணையும் ரஹ்மான் தம்பதி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai:
Annamalai: "பக்தர்கள் உயிரிழப்புக்கு சேகர்பாபுதான் பொறுப்பு" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
Fact Check: அரசுப்பள்ளி விழாவில் கட்டிப்பிடித்து நடனமாடும் மாணவ- மாணவி?- வைரல் வீடியோ- நடந்தது என்ன?
Fact Check: அரசுப்பள்ளி விழாவில் கட்டிப்பிடித்து நடனமாடும் மாணவ- மாணவி?- வைரல் வீடியோ- நடந்தது என்ன?
Israel Attack Gaza: மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய இஸ்ரேல்.. காசா மீது குண்டு மழை.. 200-க்கும் மேற்பட்டோர் பலி...
மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய இஸ்ரேல்.. காசா மீது குண்டு மழை.. 200-க்கும் மேற்பட்டோர் பலி...
அதிகரிக்கும் வெயில்.. மக்களே கட்டாயம் இத பண்ணுங்க - சேலம் ஆட்சியர் விடுத்த எச்சரிக்கை என்ன?
அதிகரிக்கும் வெயில்.. மக்களே கட்டாயம் இத பண்ணுங்க - சேலம் ஆட்சியர் விடுத்த எச்சரிக்கை என்ன?
Aadhav Arjuna : “அய்யோ விட்ருங்க – ஆதவை விட்டு விலகும் நபர்கள்” TVK-யில் நடப்பது என்ன..?
Aadhav Arjuna : “அய்யோ விட்ருங்க – ஆதவை விட்டு விலகும் நபர்கள்” TVK-யில் நடப்பது என்ன..?
Dragon Undocked: கிளம்பியது டிராகன்.. சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமியில் கால் பதிக்கிறார் தெரியுமா.?
கிளம்பியது டிராகன்.. சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமியில் கால் பதிக்கிறார் தெரியுமா.?
Embed widget