தமிழின் முதல் புதினத்தை இயற்றிய மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் 196 -வது பிறந்தநாள் விழா!
தமிழின் முதல் புதினத்தை இயற்றிய மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் 196-வது பிறந்தநாள் விழா அவரது நினைவிடத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு, தமிழ் சங்கத்தினர், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிறந்த தினம் இன்று மயிலாடுதுறையில் கொண்டாடப்பட்டது. மாயூரம் வேதநாயகம் பிள்ளை கிபி 1826 -ஆம் ஆண்டு அக்டோபர் 11 -ஆம் தேதி திருச்சி அருகே குளத்தூரில் பிறந்தார். பின்பு மயிலாடுதுறையில் கோர்ட் முன்சீப்பாக (நீதிபதியாக) பணியாற்றிய அவர், மயிலாடுதுறை நகராட்சியில் முதல் நகர்மன்ற தலைவராகவும் பதவி வகித்தார். தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக பல்வேறு தமிழ், இலக்கிய நூல்களை எழுதியவர்.

வெளிநாடுகளில் பிரபலமாகி வந்த நாவல் கதைகளைப்போன்று தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதினார். இதனால் தமிழ் முதல் புதினத்தை இயற்றியவர் என்ற பெயர் பெற்றார். அவரது 196 -வது பிறந்ததினம் இன்று மயிலாடுதுறையில் தமிழ்சங்கத்தினரால் கொண்டாடப்பட்டது. தமிழுக்கு தொண்டாற்றிய மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் திருவுருவ சிலை மயிலாடுதுறை கல்லறைத் தோட்டத்தில் அமைந்துள்ளது.

அவரது திருவுருவ சிலைக்கு தமிழ் அறிஞர்கள், மாயூரம் தமிழ் சங்கத்தினர் ,மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார், மயிலாடுதுறை மறைமாவட்ட உதவி பங்குத்தந்தை மைக்கேல் டைசன், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், மயிலாடுதுறை தமிழ்ச் சங்க நிறுவனர் ஜெனிபர் பவுல்ராஜ் மற்றும் பல்வேறு இயக்க அமைப்பினர் பொதுமக்கள் மலர் தூவி மாலை அணிவித்தும், அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து அவரது கல்லறையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வேதநாயகம் பிள்ளையின் திருவுருவ சிலையை நிறுவ வேண்டும், வேதநாயகம் பிள்ளையின் நினைவாக மணிமண்டபம் கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரது புதினத்தை தமிழக பாடதிட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று மயிலாடுதுறை தமிழ்சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
பொங்கல் விழாவுக்கு மண் பானை மற்றும் அடுப்பு ஆகியவற்றை தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆட்சியரிடம் கோரிக்கை மனு!
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். முன்னதாக மண்பாண்டங்கள் மற்றும் அடுப்பினை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக ஆட்சியர் அலுவலகத்திற்கு தொழிலாளர்கள் வருகை தந்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் லலிதாவை சந்தித்து தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

அவ்மனுவில் அழிந்து வரும் மண்பாண்ட தொழில் மேம்படவும், மண்பாண்ட தொழிலினை நம்பி வாழும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் உற்பத்தி செய்யும் அடுப்பு மற்றும் பானை ஆகியவற்றை அரசு பொங்கல் திருநாள் விழாவின்போது கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை மனுவில் தெரிவித்திருந்தனர்.
"உலகின் தலை சிறந்த வீரர் பாபர் அசாம்… பாகிஸ்தான் வலிமையான அணி" - கேன் வில்லியம்சன் புகழாரம்!






















