மேலும் அறிய

திருவாரூரில், ப்ளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் 13,072 மாணவ மாணவிகள்..

தமிழகம் முழுவதும் இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது

தமிழகத்தில் பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி வருகிற 28-ந் தேதி வரை நடக்கிறது. மாவட்டத்தில் 57 தேர்வு மையங்களில் 6 ஆயிரத்து 320 மாணவர்கள், 7 ஆயிரத்து 053 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 373 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். வினாத்தாட்கள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணிநேரமும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு எடுத்துவரப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

திருவாரூரில், ப்ளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் 13,072 மாணவ மாணவிகள்..
 
இந்த தேர்வு பணிக்கு 1,238 ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தேர்வுகளை கண்காணிக்க கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் தலைமையில் 60 பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் காவல்துறையுடன் இணைந்து நிலையான படை அமைக்கப்பட்டு தேர்வுகளில் எவ்விதமுறைகேடும் நடைபெறாமல் கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.மேலும், தேர்வு மையத்தில் செல்போன், கால்குலேட்டர் எடுத்து செல்ல அனுமதி இல்லை. தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

திருவாரூரில், ப்ளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் 13,072 மாணவ மாணவிகள்..
காப்பி அடித்தல், அனுமதிக்கப்படாத துண்டு சீட்டுகள் எடுத்து செல்லுதல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிகல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் ஆர்வத்துடன் மாணவ மாணவிகள் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
திருவாரூரில், ப்ளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் 13,072 மாணவ மாணவிகள்..
மேலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து தேர்வு எழுத வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் மாணவர்கள் ஆசிரியர்களும்  முகக்கவசம் அணிந்து வந்துள்ளனர் கிராமப்புறங்களில் இருந்து தேர்வு எழுதுவதற்கு வரக்கூடிய மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து வசதிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்து தரப்பட்டு இருந்தது இந்த நிலையில் காலை 9 மணிக்குள் தேர்வு எழுதும் பள்ளிக்கு மாணவர்கள் வருகை தந்து தேர்வு எழுதி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

தஞ்சை பெரிய கோயில் பகுதியில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள்: விரைவில் டெண்டர்: எம்.பி. முரசொலி மகிழ்ச்சி தகவல்
தஞ்சை பெரிய கோயில் பகுதியில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள்: விரைவில் டெண்டர்: எம்.பி. முரசொலி மகிழ்ச்சி தகவல்
தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget