மேலும் அறிய

ரூ.11 லட்சம் கொடுத்தால் தான் உடலை கொடுப்போம்; தனியார் மருத்துவமனை நிபந்தனையால் கதறிய பெற்றோர்

வீடு நிலம் அடமானம் வைத்தும் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக பணத்தை சேகரித்து தான்  இந்த பணத்தை கட்டி உள்ளோம். மேலும் 2 லட்சம் ரூபாய் கட்டுவதற்கு தங்களிடம் வசதி இல்லை.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திற்குட்பட்ட நாரணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன் அனிதா தம்பதியினரின் 7 வயது மகன் யுவனேஷ். வீரப்பன் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் யுவனேஷ் சிறுநீரக கோளாறல் பாதிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு சிறுவனின் உடல்நிலை மோசமாக இருப்பதால் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என கூறியுள்ளனர். இதனையடுத்து பெற்றோர்கள் கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி திருச்சி  தனியார் மருத்துவமனையில் சிறுவனை மேல் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிறுவனுக்கு 53 நாட்கள் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இதுவரை பெற்றோர்கள் தனியார் மருத்துவமனையில் ஒன்பது லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்தியுள்ளனர். இந்த நிலையில் மேலும் 2 லட்சம் ரூபாய் பணம் கட்ட வேண்டும் என்று மருத்துவமனை தரப்பில் கேட்டுள்ளனர்.

ரூ.11 லட்சம் கொடுத்தால் தான்  உடலை கொடுப்போம்; தனியார் மருத்துவமனை நிபந்தனையால் கதறிய பெற்றோர்

அதற்கு பெற்றோர்கள், வீடு நிலம் போன்றவற்றை அடமானம் வைத்தும் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக பணத்தை சேகரித்து தான்  இந்த பணத்தை கட்டி உள்ளோம். மேலும் 2 லட்சம் ரூபாய் கட்டுவதற்கு தங்களிடம் வசதி இல்லை எனவே சிறுவனை அரசு மருத்துவமனையில் சேர்த்து பார்த்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர். அதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஒரு வாரம் கழித்த நிலையில் இன்று அதிகாலை சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பெற்றோர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் சிறுவனின் உடலை தருமாறு கேட்டதற்கு மேலும் 11 லட்சம் ரூபாய் பணம் கட்டினால் உடலை தருவதாக கூறியுள்ளனர். இதனையடுத்து செய்வதறியாது திகைத்த பெற்றோர் உறவினர்கள் உதவியுடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு சிறுவனின் தாய் கதறி அழுதது காண்போர் நெஞ்சை உலுக்கும் விதமாக இருந்தது.

ரூ.11 லட்சம் கொடுத்தால் தான்  உடலை கொடுப்போம்; தனியார் மருத்துவமனை நிபந்தனையால் கதறிய பெற்றோர்

தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் சிறுவனின் பெற்றோர்கள் சிறுவனின் உடலை மருத்துவமனை நிர்வாகத்தில் இருந்து மீட்டுத் தருமாறு கோரிக்கை மனு அளித்துள்ளனர். இந்த சம்பவம் நாரணமங்கலம் பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெற்றோர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்தது சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு தெரிந்த நிலையில், நேற்று நள்ளிரவு பணம் நிபந்தனை இல்லாமல் சிறுவனின் உடலை மருத்துவமனை நிர்வாகம் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதன் பின்னர் நல்லடக்கம் செய்ய சொந்த ஊரான நாரணமங்கலம் பகுதிக்கு சிறுவனின் உடல் கொண்டுவரப்பட்டது. அப்போது குழந்தையின் தாய் மற்றும் ஊர் மக்கள் கதறிய காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மனிதாபிமானம் இல்லாத முறையில் தனியார் மருத்துவமனை உயிரிழந்த சிறுவனின் உடலை கொடுக்காமல் பெற்றோரை அலைக்கழித்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வேதனையும் ஏற்படுத்தியது. தற்பொழுது சிறுவனின் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்வதற்காக கொண்டு வந்த பொழுது அந்த கிராமமே ஒன்று திரண்டு கண்ணீர் மல்க சிறுவனுக்கு விடை அளித்த சம்பவம் பார்ப்போரை கண் கலங்க வைத்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
Embed widget