கோவில்பட்டி நகராட்சி பகுதியில் வருகிற மே 9ம் தேதி தற்காலிக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்-சமாதானக் கூட்டத்தில் முடிவு
கோவில்பட்டி நகராட்சி பகுதியில் உரிய அனுமதி பெறாமல் செயல்படும் ஆவின் பாலகங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பது, மினிபஸ்களை உரிய நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்வது என முடிவு.
![கோவில்பட்டி நகராட்சி பகுதியில் வருகிற மே 9ம் தேதி தற்காலிக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்-சமாதானக் கூட்டத்தில் முடிவு Temporary encroachments will be removed on May 9 in Kovilpatti Municipal area - decision in peace meeting கோவில்பட்டி நகராட்சி பகுதியில் வருகிற மே 9ம் தேதி தற்காலிக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்-சமாதானக் கூட்டத்தில் முடிவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/25/945a60c2a1cb36117e19b903dc78c3a31714036360998571_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவில்பட்டி நகராட்சி பகுதியில் வருகிற மே 9ம் தேதி தற்காலிக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் முடிவு .
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் உள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் வரும் 26ந்தேதி பட்டினி போராட்டம் நடத்த போவதாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து இருந்தனர். இதையடுத்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ஜோன் கிறிஸ்டி பாய் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மே.9ந்தேதி கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, இன்று முதல் தற்காலிக கடைகளுக்கு உரிமைக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்துவது, அனுமதியின்றி செயல்படும் சாலையோர கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்வது, கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் பயணிகள் நிற்க முடியாத அளவிற்கு மக்கள் நடை பாதை வரை வைத்துள்ள கடை ஆக்கிரமிப்புகளை ஒரு வார காலத்திற்குள் அகற்றுவது, கோவில்பட்டி நகராட்சி பகுதியில் உரிய அனுமதி பெறாமல் செயல்படும் ஆவின் பாலகங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பது, கோவில்பட்டி நகரில் இயக்கப்படும் மினிபஸ்களை உரிய நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்வது என கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து நாளை நடைபெற இருந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
கூட்டத்தில் கோவில்பட்டி தாசில்தார் சரவணப் பெருமாள், வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியபாண்டியன், கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் சுகாதேவி, நகராட்சி, நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)