கடைகளை அடைக்கக்கூறி வன்முறையில் ஈடுபட்ட பாஜவினர் - மக்கள் நீதி மய்யம்
பரப்புரையில் ஈடுபட நேற்று உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழகம் வந்தார்
அதிமுக மற்றும் பாஜகவை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட நேற்று உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழகம் வந்தார். கோவையில் அவர் பரப்புரையில் ஈடுபடவிருந்த நிலையில் கோவை டவுன்ஹால் பெரிய கடைவீதி பகுதியில் இஸ்லாமியர்கள் கடைகளை அடைக்கவேண்டும் என்று கூறி பாஜக ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு தனது கண்டனத்தை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் மூலம் வெளியிட்டார்.
அதனை தொடர்ந்து மிரட்டப்பட்டதாக கூறப்படும் கடைக்கு நேரடியாக சென்று தனது ஆதரவை தெரிவித்துள்ளார் கமல்ஹாசன். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கையில் 'கலவரக்காரர்கள் மிரட்டப்பட்ட வி எம் காலனியகம் என்னும் செருப்புக் கடைக்கு நேரில் சென்று தனது ஆதரவினை தெரிவித்தார் கமல்ஹாசன்'

உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோவை வந்திருந்ததையொட்டி டவுன்ஹால் பெரிய கடைவீதி பகுதியில் இஸ்லாமியர்களின் கடைகளை அடைக்க சொல்லி பாஜக கும்பல் வன்முறையில் ஈடுபட்டனர்.

இதனை கண்டித்து தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் சமூக வலைத்தளங்களில் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
(1/3) pic.twitter.com/850kBCTwbE
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) March 31, 2021

'மேலும் அவர்களிடம் பேசிய தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் இரு மதத்தினரிடையே வன்முறையை தூண்டி கலவரத்தை நடத்தி ஆதாயம் பார்க்கலாம் என நினைக்கும் சமூக விரோதிகள் விரைவில் முறியடிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.'