தமிழகத்தில் நிறைவு பெற்றது இறுதிகட்ட பரப்புரை
கடந்த ஒரு மாதமாக நடந்த தேர்தல் பரப்புரை சற்றுமுன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தொகுதிக்கு சம்மந்தமில்லாதவர்கள் வெளியேற உத்தரவு.
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து கடந்த ஒரு மாதமாக தீவிரமாக நடந்த பரப்புரை, இறுதி நாளான இன்று அனல் பறந்தது. வழக்கத்தை விட கூடுதலாக 2 மணி நேரம் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து இரவு 7 மணி வரை பிரசாரம் நடைபெற்றது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ், திமுக தலைவர் ஸ்டாலின், மநீம தலைவர் கமல், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக தமிழக தலைவர் முருகன், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் என அனைத்து தலைவர்களும் இறுதிகட்ட பரப்புரையில் ஈடுபட்டனர்.
சரியாக 7 மணிக்கு பரப்புரை நிறைவுபெற்றதாக தமிழக தலைமை தேர்தல் அலுவலர் அறிவித்தார். அதன் படி அனைவரும் பிரசாரத்தை முடித்துக் கொண்டனர். நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் உடனே தொகுதியை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போல புதுச்சேரி மற்றம் கேரளாவிலும் இறுதி பரப்புரை நிறைவு பெற்றுள்ளது.