மேலும் அறிய
Advertisement
ரவிச்சந்திரனின் விடுப்பு கோரிக்கையை நிராகரித்தது தமிழக அரசு
தேர்தல் காலம் என்பதால் ரவிச்சந்திரனுக்கு ஒரு மாத விடுப்பு வழங்க முடியாது என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக சிறையில் இருக்கும் 7 தமிழர்களில் ஒருவர் ரவிச்சந்திரன். இந்த நிலையில், ரவிச்சந்திரனின் தாயாரான ராஜேஸ்வரி, தன்னுடைய மகனுக்கு ஒரு மாத சாதாரண விடுப்பு வழங்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, இந்த வழக்கில் பதிலளித்த தமிழக அரசு, தற்போது தேர்தல் காலம் என்பதால் அவருக்கு வழிப்பாதுகாப்பு வழங்க இயலாது என்றும், விடுப்பு காலத்தில் அவரது வீட்டிற்கு உரிய பாதுகாப்பு வழங்க இயலாத காரணத்தாலும் தற்போது ரவிச்சந்திரனுக்கு ஒரு மாத விடுப்பு வழங்க இயலாது என்று பதிலளித்துள்ளது. ரவிச்சந்திரன் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion