ஜெயலலிதா வீட்டின் எதிரே புதிய வீடு: போயஸ் கார்டனில் மீண்டும் சசிகலா
போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீட்டிற்கு எதிரே புதிய வீடு கட்டப்பட்டு வரும் நிலை அப்பணிகளை சசிகலா நேரில் வந்து ஆய்வு செய்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழிலான சசிகலா, போயஸ்காடனில் ஜெயலலிதா உடன் வசித்து வந்தார். ஜெயலலிதா மறைவிற்கு பின் சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த போது, ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது. வழக்கில் விடுதலையாகி சென்னை திரும்பிய சசிகலா, தன் உறவினர் வீட்டில் தங்கி வந்தார். அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த சசிகலாவின் அடுத்த திட்டம் என்ன என்பது தெரியாத நிலையில், இன்று போயஸ் காடனுக்கு திடீரென புறப்பட்டார் சசிகலா.
ஜெயலலிதாவின் வேதா இல்லம் வரை வந்த அவரது கார், திடீரென எதிரில் கட்டுமானப்பணி நடந்த இடத்திற்குள் நுழைந்தது. அங்கு இறங்கிய சசிகலா, பணிகளை சுமார் 2 மணி நேரம் பார்வையிட்டார். அதன் பிறகு தான் தெரிந்தது, ஜெயலலிதா வீட்டிற்கு எதிரில் சசிகலா புதிய வீடு கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறார் என்பது. கட்டுமானப்பணிகள் குறித்து ஆய்வு செய்த சசிகலா, பின்னர் அங்கிருந்து புறப்பட்டார்.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Sasikala visits her new under construction residence which is right opposite to Jayalalithaa's Poes Garden residence in Chennai. She spent more than 2hrs at the under construction residence to overview the construction works. <a href="https://t.co/zAdZ1YK3rU" rel='nofollow'>pic.twitter.com/zAdZ1YK3rU</a></p>— Mugilan Chandrakumar (@Mugilan__C) <a href="https://twitter.com/Mugilan__C/status/1380478721778315264?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>April 9, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
போயஸ்கார்டன் வேதா இல்லத்திற்கு தான் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக மேற்கொண்ட முயற்சியை முறியடிப்பதற்காகவே ஜெயலலிதா வீட்டிற்கு எதிரில் புதிய வீடு கட்டி, அங்கு குடியேற முடிவு செய்திருக்கிறார் சசிகலா. இது நாள் வரை அங்கு நடந்த கட்டுமானப்பணி யாருடையது என தெரியாமல் இருந்த நிலையில், தற்போது அது சசிகலாவினுடையது என்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் போயஸ்கார்டனில் தனது அரசியல் பிரவேசத்தை சசிகலா மீண்டும் துவக்குவார் எனத்தெரிகிறது.