புதுச்சேரியில் போதுமான அளவில் கொரோனா தடுப்பூசி இருப்பு உள்ளது - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி போதிய அளவில் உள்ளதாக அம்மாநில பொறுப்பு ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US: 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைப் போலவே, புதுச்சேரியிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரியில் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக அம்மாநில பொறுப்பு ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு பிறகு, நிருபர்களுக்கு பேட்டி அளித்த தமிழிசை செளந்தரராஜன், “புதுச்சேரியில் தடுப்பூசி திருவிழாவில் முதல் நாளில் 7,271 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். பக்க விளைவுகள் ஏதும் ஏற்படவில்லை. புதுச்சேரியில் தேவையான அளவு தடுப்பூசி உள்ளது. தற்போது 1.10 லட்சம் பேருக்குத் தேவையான தடுப்பூசிகள் புதுச்சேரியில் உள்ளன.புதுச்சேரியில் போதுமான அளவில் கொரோனா தடுப்பூசி இருப்பு உள்ளது - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

புதுச்சேரியில் முகக்கவசம் அணியாவிட்டால் நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு முகக்கவசம் வழங்கப்படவேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆதார் மட்டுமில்லாமல் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை ஏதேனும் ஒன்றைக் காண்பித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். அனைத்து மருத்துவமனைகளிலும் தேவையான படுக்கை வசதிகள் உள்ளன. எனினும், தேவைப்படின் தனியாக கோவிட் சென்டரை அமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மக்கள் அச்சப்படாமல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றவேண்டும்.புதுச்சேரியில் போதுமான அளவில் கொரோனா தடுப்பூசி இருப்பு உள்ளது - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

நாட்பட்ட நோய்களில் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை தரவும், தொடர்ந்து அவர்களுக்குத் தேவையான மருந்துகள் தரவும் நடவடிக்கையை சுகாதாரத்துறை எடுத்துள்ளது. அதேபோல், ஜிப்மரிலும் நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெறுவோருக்காக மருந்து மாத்திரைகள் சிகிச்சையை புதுச்சேரி மட்டுமல்லாமல் தமிழக மக்களும் பெறுவதால் அது தொடர்பாகப் பேசவுள்ளோம்” என்று கூறினார்.

Tags: Vaccine covid 19 pondichery tamilisai

தொடர்புடைய செய்திகள்

Tamil Nadu Coronavirus LIVE News : 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? இன்று முதல்வர் ஆலோசனை

Tamil Nadu Coronavirus LIVE News : 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? இன்று முதல்வர் ஆலோசனை

Tamil Nadu Lockdown: தமிழ்நாட்டில் பஸ்கள் இயக்க வாய்ப்பு? ஊரடங்கு தொடர்பாக முதல்வர் இன்று ஆலோசனை!

Tamil Nadu Lockdown: தமிழ்நாட்டில் பஸ்கள் இயக்க வாய்ப்பு? ஊரடங்கு தொடர்பாக முதல்வர் இன்று ஆலோசனை!

ஸ்மார்ட் வகுப்புகள் முதல் விவசாயம் வரை : தனியார் பள்ளிகளுக்கு டஃப் கொடுக்கும் ராமசாணிகுப்பம் அரசுப்பள்ளி..!

ஸ்மார்ட் வகுப்புகள் முதல் விவசாயம் வரை : தனியார் பள்ளிகளுக்கு டஃப் கொடுக்கும் ராமசாணிகுப்பம் அரசுப்பள்ளி..!

Sivashankar Baba | மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் குற்றம்சாட்டப்பட்ட சிவசங்கர்..!

Sivashankar Baba | மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் குற்றம்சாட்டப்பட்ட சிவசங்கர்..!

கரூர் : குறைகிறதா கொரோனா தொற்று? தடுப்பூசி பணிகளின் நிலவரம் என்ன?

கரூர் : குறைகிறதா கொரோனா தொற்று? தடுப்பூசி பணிகளின் நிலவரம் என்ன?

டாப் நியூஸ்

Rahul Gandhi Birthday: கனிவு... பணிவு... துணிவு! நம்பிக்‛கை’ நாயகன் ராகுல் காந்தி!

Rahul Gandhi Birthday: கனிவு... பணிவு... துணிவு! நம்பிக்‛கை’ நாயகன் ராகுல் காந்தி!

Milka Singh Passes away: 'பறக்கும் சீக்கியர்' மில்கா சிங் எனும் சகாப்தம் !

Milka Singh Passes away: 'பறக்கும் சீக்கியர்' மில்கா சிங் எனும் சகாப்தம் !

‛வேலைக்கு போகச் சொன்னது குத்தமா...’ குடும்பத்தையே ‛குளோஸ்’ செய்த கொடூர இளைஞர்!

‛வேலைக்கு போகச் சொன்னது குத்தமா...’ குடும்பத்தையே ‛குளோஸ்’ செய்த கொடூர இளைஞர்!

என்னது ஏரோபிளேன் ‛ஸ்கிட்’ ஆச்சா... நம்ம ஊரு ரோடு பரவாயில்லையே!

என்னது ஏரோபிளேன் ‛ஸ்கிட்’ ஆச்சா... நம்ம ஊரு ரோடு பரவாயில்லையே!