தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா 2800ஐ தாண்டிய தொற்று எண்ணிக்கை.
சென்னையில் நேற்று அதிகபட்சமாக 1083பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதுள்ளது.
இந்திய அளவில் மீண்டும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது நினைவுகூரத்தக்கது. இந்நிலையில் தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகின்றது.
கடந்த சில நாட்களாக 2000ஐ கடந்து வந்த தொற்று 2800ஐ கடந்துள்ளது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் நேற்று அதிகபட்சமாக 1083பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதுள்ளது. செங்கல்பட்டு மற்றும் கோவை ஆகிய நகரங்களில் தொற்று எண்ணிக்கை 250ஐ கடந்துள்ளது. மேலும் காஞ்சிபுரம், தஞ்சாவூரும் திருவாளர் ஆகிய பகுதிகளில் தொற்று என்னிற்க்கை 100ஐ கடந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரேநாளில் 6 பேர் உள்பட தமிழகத்தில் ஒரே நாளில் 19 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
தமிழக தேர்தல் வாக்குப்பதிவுகள் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கவுள்ளது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்படலாம் என்று கருதி மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.