திறந்தவெளி பரப்புரை வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் வரும் நாட்களில் இயல்பைவிட கூடுதல் வெப்பம் நிலவும் என்பதால், 12 மணியில் இருந்து 4 மணிவரை திறந்தவெளியில் அரசியல் கட்சிகள் பரப்புரை செய்ய வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது, 
“ஏப்ரல் 1 முதல் 4 வரை தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.  ஏப்ரல் 5-ந் தேதி தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக தெளிவாகக் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.திறந்தவெளி பரப்புரை வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை

அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு

தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து தமிழகம் நோக்கி வீசுவதால் ஏப்ரல் 1 முதல் 4-  வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நகபட்டினம், மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4-லிருந்து 6 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
ஏப்ரல் 5 முதல் 7 வரை கரூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் வெப்பநிலை அதிகபட்சமாக 4லிருந்து 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். இதன் காரணமாக ஒருசில இடங்களில் அனல் காற்று வீசக்கூடும்.திறந்தவெளி பரப்புரை வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை

பொதுமக்கள், விவசாயிகள், தேர்தல் வேட்பாளர்கள், வாக்காளர்கள் மற்றும் போக்குவரத்துக் காவலர்கள் முற்பகல் 12 மணி முதல் பிற்பகல் 4 மணிவரை திறந்த வெளியில் வேலை செய்வது மற்றும் ஊர்வலம் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது. ஏப்ரல் 5 முதல் 7 வரை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 லிருந்து 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு ஏதும் இல்லை.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

மத்திய அந்தமான் கடல் பகுதியில் தற்போது நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக ஏற்படுகிற அந்தமான் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்''.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags: election campaign increase summer hot temperature

தொடர்புடைய செய்திகள்

'கோயில் நிலம் கோயில்களுக்கே.. வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது’ - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

'கோயில் நிலம் கோயில்களுக்கே.. வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது’ - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

COVID-19 Vaccine : ‛தயக்கமல்ல தட்டுப்பாடே காரணம்’ தடுப்பூசி குறித்து பிரதீப் கவுர் கருத்து!

COVID-19 Vaccine : ‛தயக்கமல்ல தட்டுப்பாடே காரணம்’  தடுப்பூசி குறித்து பிரதீப் கவுர் கருத்து!

TN petrol diesel price hike: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக பெட்ரோல் பங்குகள் முன் ஆர்ப்பாட்டம்-கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

TN petrol diesel price hike: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக பெட்ரோல் பங்குகள் முன் ஆர்ப்பாட்டம்-கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

Chennai HC on Lockdown Relaxation: ஊரடங்கில் அடங்காதவர்களுக்கு ஐகோர்ட் அட்வைஸ்

Chennai HC on Lockdown Relaxation: ஊரடங்கில் அடங்காதவர்களுக்கு  ஐகோர்ட் அட்வைஸ்

ஒன்றரை ஆண்டில் 341 குழந்தை திருமண ஏற்பாடுகள்; மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

ஒன்றரை ஆண்டில் 341 குழந்தை திருமண ஏற்பாடுகள்; மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தேவையில்லாமல் மக்கள் வெளியே நடமாடக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்

Tamil Nadu Coronavirus LIVE News :  தேவையில்லாமல் மக்கள் வெளியே நடமாடக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்

‛உன் உருவமும்... உன் கலரும்...’ குக் வித் கோமாளி தீபா சங்கர் சந்தித்த சங்கடங்கள்!

‛உன் உருவமும்... உன் கலரும்...’ குக் வித் கோமாளி தீபா சங்கர் சந்தித்த சங்கடங்கள்!

தமிழ்நாடு குடிமகன்கள் கூல்... புதுச்சேரியில் மது டோர்டெலிவரிக்கு அனுமதி!

தமிழ்நாடு குடிமகன்கள் கூல்... புதுச்சேரியில் மது டோர்டெலிவரிக்கு அனுமதி!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை பாழாக்கும் சோப்பு தொழிற்சாலைகள்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை பாழாக்கும் சோப்பு தொழிற்சாலைகள்